பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறுபடும்; அவனுக்குத் தேவையான இன்றியமையாப் பொருள் களும் பலப்பல; ஆனல் அதே நேரத்தில் அவன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் சக்தியையும் பெற்றிருக்கிருன். - ஆடம்பரம் என்பது என்ன ? விளக்கெண்ணெய் விளக்கை நீக்கிவிட்டு மண்ணேண்ணெய் விளக்கையும், பிறகு அதனையும் நீக்கிவிட்டு மின் விளக்கையும் ஏற்றுக்கொண்டதை ஆடம்பரம் என்று கூறிவிடலாமா? பகல் நேரங் கழிந்த இரவு நேரத்தில்கூடச் செயற்கை ஒளிக்கு வேலை இல்லாமற்போகும் காலத்தில்தான் மின் விளக்கை விட்டுவிட முடியும். இரவு நேரம் வந்து விளக்கெண் ணெய் விளக்கை ஏற்றியபொழுது ஏற்பட்ட அதிகப்படித் தேவையைப் பூர்த்தி செய்யவே அந்தப் பழைய விளக்கின் முன் னேற்றமாக மின் விளக்குச் செய்யப்பெற்றது. இன்று மின் விளக் கைப் பயன்படுத்துவது ஆடம்பர மன்று ; அதனைப் பயன்படுத் தாமை வறுமையின் அடையாளமேயாகும். மாட்டு வண்டி முதன் முதலில் செய்யப்பெற்றபொழுது அது செல்வத்தின் அடையாள மாக இருந்தது. ஆனல் அந்த வண்டியினுள்ளேயே மோட்டார். வண்டித் தத்துவம் மறைந்து கிடந்தது. மாட்டு வண்டியைப் பயன் படுத்திய மனிதன் இன்று மோட்டாரைப் பயன்படுத்த வில்லை என்ருல் அது அவனுடைய வறுமையைத்தான் காட்டி கிற்கிறது. ஒரு காலத்தில் செல்வம் என்று கருதப்பட்டது அதனையடுத்த காலத்தில் வறுமையைக் காட்டுகிறது. வறுமையை அடைவதன் மூலமே அதனை வென்று விடலாம் என்று கூறுகிறவன் நொய்மை யான மனம் படைத்தவனேயாவான். நவீன யுகம் படைத்துள்ள வசதிகள் பலவற்றையும் ஒரு சிலரே அனுபவிக்க, பெரும்பாலானவர்கள் அதனை அடைய முடியா மலிருப்பது ஒரு பெரிய துரதிருஷ்டமாகும்; சமுதாயம் இதற்குக் கழுவாய் (பிராயச்சித்தம்) செய்தே யாகவேண்டும். இதற்குரிய வழி செல்வத்தைக் குறைப்பதோ, அதனே வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொள்வதோ அல்லது பிறருக்குத் தந்துவிடுவதோ அன்று. எல்லா மக்களிடமும் செல்வத்தைப் படைக்கும் ஆற் றலைத் தூண்டிவிடுவதே வழியாகும். மற்ருெரு வகையாகக் கூற வேண்டுமாகுல் கடட்டுறவுக் கொள்கையை மக்கள் அறியுமாறு பரப்பவேண்டும். Qత్తాత్తు வேறுபாட்டை அதிகார முறையினுல் முற்றிலும் போக்கிவிட முடியும் என்பதை கான் நம்பவில்லை. மனிதனிடம் இயல்பாகவே அமைந்துள்ள ஏற்றத் தாழ்வு எப்பொழுதும் தன்