பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 - அனைத்துலக மனிதனே நோக்கி இருப்பை நிலைநாட்டிவிடும். இதனை யல்லாமல் சுபாவங்களில் உள்ள வேறுபாடு வேறு இருக்கிறது. சிலர் பணத்தைக் குவிப் பதில் விருப்பங் காட்ட, இன்னுஞ் சிலர் அதுபற்றிக் கவலைப்படுவ தாகவே தெரியவில்லை. இதன் பயணுகவே செல்வ இருப்பில் ஏற்றத் தாழ்வுகள் உண்டாக்கப்படுகின்றன. யந்திரத் தன்மை வாய்ந்த சமநிலை முடியவும் முடியாது; விரும்பத் தகுந்ததும் அன்று. இயற்கை உலகத்தில் காணப்படுவது போலவே, மனித உலகத் திலும், முழுச் சமத்துவம், சுய ஊக்கத்தைத் தடுத்து"அறிவை மழுங்கச் செய்து விடுகிறது. அதே நேரத்தில், அளவு மீறிய தார, தம்மியமும் கெடுதலைச் செய்யும். ஏனெனில் மக்களிடையே உள்ள பொருளாதார் தூரத்தை அதிகப்படுத்துவதால் சமுதாயக் கூட்டுறவைத் தடை செய்துவிடுகிருேம். இத்தகைய தடைகளின் நிழலில்தான் தீமை தன் கூட்டைக் கட்டுகிறது. - ஒவ்வொரு மனிதனுக்கும் போதுமான அளவு கூலியும், ஓய்வும் பெற உரிமை யுண்டு. வாழ்க்கைக்கு மிக இன்றியமையாத தேவை களை மட்டும் பெற்றிருப்பது அவமதிப்பாகும். விருப்ப மில்லாத பலருடைய உழைப்பின் பயனக நாகரிக வாழ்க்கையின் கெளரவம் என்பதே இன்று மிகச் சிலரிடந்தான் தங்கியுள்ளது. பெரும்பான் மையான மக்கள் கல்வி, சுகாதாரம் என்பவற்றுடன் இன் பத் திற்குக் காரணமான வசதிகளையும் இழந்துவிட்டு அறிவில்லாதவர்க ளாகவே வாழ்ந்து மடிய விடப்பட்டுள்ளார்கள். இதன் பயன் என்ன ஆகும் என்பதுபற்றி காம் கவலேப்படவே இல்லை. என்ருலும், இனியும் இதுபற்றிக் கவலைப்படாமல் இருக்கமுடியாது. மிகக் குறுகிய இடத்தில் அடங்கிக் கிடக்கும் சக்தியின் வெளிப்படு முயற் சியாக உள்ள உக்கிரமான சமுதாயப் புரட்சிகள் உலக முழுவதும் தொடங்கிவிட்டன. அந்தச் சக்தியை இப்பொழுது விடுவித்துப் பரவலாகப் பயன்படுமாறு செய்யவேண்டும். கிராம அடிப்படையிலுள்ள பொருளாதாரத்தில் கூட்டுறவு முறை ஒரு காலத்தில் கையாளப்பட்டது. ஆனல் அன்றிருந்தது போல வாழ்க்கை இன்றில்லே. மேலும் பணக்காரர்கள் தன்னல மற்றவர்களாக இக்காலத்தில் இருப்பது மிகமிகக் கடினம். அதுவும் ஒரு முறையில் நல்லதுதான். ஏனெனில் பெரும்பான்மை யான மக்கள் தங்கள் பங்கு ஆற்றலை வளர்த்துக்கொள்ள, இதுவே தகுந்த நேரம். இது என்றும் நிலையானதாக இருக்கும். இந்தியப் பொருளாதாரத்தை மறுபடியும் கூட்டுறவு முறையில் அமைத்தால் நம் நாகரிகத்தின் சிசு வளர்ப்புக் கூடங்களாக உள்ள கிராமங்கள்