பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. மாறும் யுகம் மிகச் சமீப காலம் வரையில்கூட நம்முடைய காட்டு மக்கள் கோயில் முகப்பில் சிறுசிறு கூட்டமாகக் கூடி, வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டும், சீட்டுவிளையாடிக் கொண்டும் ஓய்வு நேரங்களைக் கழித்தார்கள். அவர்கட்கு மிகவும் பழக்கமாகவுள்ள கிராம வாழ்க்கை வட்டத்தைச் சுற்றியே அவர்கள் சிந்தனையும். பேச்சும் நடைபெற்றன. அவர்களுடைய பண்பாட்டுத் தேவை யெல்லாம் என்ருே ஒருநாள் வந்து போகின்ற நாடகக் குழுவினர் நடத்திய நாடோடி நாடகங்களிலும், பழைய காப்பியங்களைப் படிப்பதிலும், புலவர்கள் ஒன்று கூடிப் பாடல் இயற்றும் போட்டியிலும் முடிவ. ட்ைந்து விட்டன. இந்த போட்டிகளுக்குத் தேவையான கருப் பொருள் எல்லாம் பழங்காலக் கர்ண பரம்பரைக் கதைகளிலிருந்தே எடுக்கப்பெற்றன. இது மிகவும் நெருக்கமானதும், மிகக் குறுகிய தும் தனக்குத் தானே சுற்றுவதுமாகிய ஓர் உலகம். வருஷத்திற்கு வருஷம், தலைமுறைக்குத் தலைமுறை இதே விஷயம் எவ்வித மாறுபாடுமின்றித் திருப்பித் திருப்பி வந்து கொண்டிருந்தது. இதற்கு அப்பால், பரந்து கிடக்கின்ற உலகத்தில் உள்ள மக்கள் முரட்டுப் பழக்கங்களாலும், சாஸ்திர உத்தரவுகளாலும் கட்டுப் படுத்தப்படாமல் மேலும் மேலும் வரலாற்றைப் புதிதாக ஆக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு பகுதி மற்ருெரு பகுதியோடு முரண்படு வதால் தோன்றுகின்ற புதிய புதிய பிரச்னைகட்கு எல்லாம் தீர்வு காணுவதன் மூலம் அவர்கள் வரலாறு ஓயாது மாறிக்கொண்டே இருந்தது. இந்த மாறுபாடுகள் எல்லாம் நம்முடைய மனக் காட் சிக்கு மிக மிக அப்பாற்பட்டவையாய் இருந்தன. முதன் முதலில் இந்த நாட்டை முஸ்லீம்கள் பிடித்து ஆண்ட பொழுது குறுக்குச் சுவர் வைத்துக் கட்டப்பட்ட கம்முடைய மனிதத் தன்யைக்கு முதலாவது அடி கிடைத்தது. ஆளுல் முஸ்லீம்களும்கட்ட மாறுபாட்டை விரும்பாத கீழ் நாடுகளைச் சேர்ந்தவர்க ளாத்லால், தங்களுடைய பழமையிலேயே கட்டுண்டு கைதிகளாக இருந்தார்கள். அவர்களுடைய வலிமையால் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த போதிலும், அவர்களுடைய மனங்களிலும்கூட ஆக்கத்தினுல் ஏற்படும் கிளர்ச்சி இல்லே. நம் முடைய எல்லைகளில் அவர்கள் தங்க நேர்ந்தவுடன் நமக்கும் அவர் களுக்கு மிடையே முரண்பாடுகள் தோன்றின. என்ஞ்லும், இந்த முரண்பாடுகள் மாறுபாட்டை விரும்பாத இரண்டு கொள்கைள்