பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 6. அனைத்துலக மனிதனை நோக்கி நம்முடைய சிந்தனையிலும், கடைமுறையிலும்கூடப் புரட்சிகர மான மாறுதல்கள் தோன்றியுள்ளன. சமுதாயப் பழக்கம் காரணமாகத் தீண்டத்தகாதவர்கள் என்று தள்ளப்பட்டவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டுமென்ற கொள்கையிலிருந்து இது புலனுகும். இன்றுங்கூட, தீண்டத்தகாதவிர்களைக் கோயிலுக் குள் அனுமதிப்பதற்கு நீதியை அடிப்படையாகக் கொள்ளாமல், சாஸ்திரங்களில் ஆதாரம் தேடுகின்றவர்கள் இருக்கிருர்கள். என்ருலும் ஒருதலைப்பட்டசமான இந்த வாதங்களை யாரும் சட்டை செய்வதில்லை. சாஸ்திரங்கள், மரபுகள், தனிப்பட்ட மனிதர்களின் பெருமைகள் அனைத்தும் ஒன்று கூடினும் ஒரு பிழையைச் சரியாக்கி விட முடியாதென்றும், நீதி பற்றிய கொள்கை ஒன்றே முடிவானதென்றும் மக்களின் அந்தராத்மா, சொல்லத் தொடங்கி யுள்ளது. - - முஸ்லீம்கள் காலத்திய வங்காள இலக்கியம் பற்றி மீண்டும் பேச வருவோம். கொடுமை செய்வதற்கு எல்லை யில்லாத உரிமை பெற்றிருப்பவர்களே மிக உயர்ந்த ஆற்றலைப் பெற்றவர்கள் என்ற கொள்கை அக்கால இலக்கியத்தில் காணப்படுகிறது. இத்தகைய ஓர் எண்ணம் தெய்வக் கொள்கையைக்கட்ட மங்கச் செய்துவிட்டது. ஆற்றல் நிறைந்த மனிதர்கள் தங்களுடைய அதிகாரத்தை நிலை கிறுத்திக் கொள்வதற்குக் கையாண்ட மிகக் கொடுமையான வழிகள் தெய்வங்களுக்கும் தேவதைகளுக்கும் கூடக் கருவியர்க் இருந்தன என்றும் அந்தத் தெய்வங்கனின் மதிப்பை அறிவதற்கு அவர்கள் செய்யக் கூடியக் கொடுமையே அளவுகோலாக இருந்தது என்றும் அறிகிருேம். சாதாரண மனிதன்தான் சட்டங்களுக்கும், மரபுகளுக்கும் கட்டுப்பட வேண்டும்; உயர்ந்த இடத்திலிருந்த மனிதன் எந்தச் சட்டத்தை யும் உடைப்பதற்குரிய வலிமை பெற்ருன். எல்லை யில்லாத அதிகாரத்தைப் பெற்றுள்ள ஒருவனுடைய முரட்டுத்தனமான கர்வம் ஓரளவு தெய்வீகம் பெற்ற தென்றுகடிடக் கருதினர்கள். அக் காலத்தில் வழங்கிய பழமொழி டில்லியிலுள்ள அரசனும் எல்லா வற்றையும் ஆக்கிப் படைக்கும் கடவுளும் ஒன்றே" என்பதாகும். அந்த இருவரும் நியாயம் வழங்குவதில் ஒற்றுமைப்படாமல், அதிகாரத்தைப் பிரயோகம் செய்வதில் மட்டும் ஒன்ருக இருந் தனர். பிராமனன் பூதேவன் ’ அதாவது பூமியிலுள்ள தேவன் ஆவான் என்று சொல்லப்பட்டான். இது தெய்வீகத் தன்மைக் குரிய எந்தப் பெருந்தன்மையும் இல்லாவிட்டாலும் வெறும்