பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 அனைத்துலக மனிதனே நோக்கி. னுேம், இன்றுகூட, கம்மிடையே உள்ள கற்றறிவுடைய சிலர் அரசியல் துறையில் எதனையும் எதிர்த்துப் போராடத் துணிவு கொண்டவர்களாயினும் சமுதாயச் சமயத் துறைகளை எதிர்த்துப் போராடாமல் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கூறு கிருர்கள். எங்தச் சூழ்ங்லையில் ஒருவன் பிறந்தனே, அந்தச் சூழ் கிலே அவனுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டதாதலின், அதனை அப் படியே ஏற்றுக் கொள்ளவேண்டு மென்று கினேக்கின்ற நம்பிக்கை தான் நம்முடைய அரசியல் அடிமைத்தனமாகிய சங்கிலியில் மிக வலுவான ஒரு கணு என்பதை அவர்கள் மறந்து விடுகிருர்கள். என்ருலும் ஐரோப்பாவுடன் நாம் கொண்டுள்ள தொடர்பு அனைத் துலகச் சட்டங்களாகிய காரண, காரியச் சட்டங்களைப் பற்றி நம்மிடையே ஒரு விழிப்பை உண்டாக்கி யுள்ளன. அந்தச் சட்டங் கள் கொடுத்துள்ள மதிப்புக்களை எதிர்த்துப் பழைய சாஸ்திரங் களும், பரம்பரை பரம்பரையான பழக்கங்களும் வீணே கடச்சலிடு கின்றன. இந்த நிலையில் கின்றுதான் நம்முடைய குறைகளை யெல் லாம் தாண்டிக்கட்ட, நம்முடைய அரசியல் கிலேயியை முன்னேற் றிக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிருேம். ஒரு காலத்தில் மொகலாயச் சக்கரவர்த்திகளிடம் நாம் கேட்கத் துணியாத சில வற்றை இன்று நம்மை ஆள்பவர்களிடம் கேட்கத் துணிந்தால் அது கவிஞனுடைய கூற்றுப்படியுள்ள ' என்ன இருந்தாலும் மனிதன் மனிதன்தான் ’ என்ற அந்த இலட்சியத்தை அடிப்படை யாகக் கொண்டதேயாகும். நான் இப்பொழுது எனது 70-வது ஆண்டைக் கடந்து விட்டேன். உண்மையில் ஐரோப்பிய யுகம் என்று பொருத்தமாக அழைக்கப்படக் கட்டிய புது யுகத்தில் 19-ம் நூற்ருண்டின் இடைப் பகுதியில் நான் புகுந்தேன். அந்த இடைக் காலத்தை இக் கால இாேஞர்கள் கேலியாக விக்டோரியா யுகம் என்று அழைக்கிருர் கள். கம்மைப் பொறுத்தவரை ஐரோப்பாவின் பிரதிநிதியாக வுள்ள பிரிட்டன் தன்னுடைய அதிகாரம், செல்வ வளம் என்ற இரண்டிலும் உச்ச நிலையிலிருந்த காலம் அது. அக் காலத்தில் பிரிட்டனுடைய அழகிய மாளிகையில் எந்த இடத்திலேனும் வெடிப்பு விடக்கூடு மென்ருே, அதன் வழியாகத் துரதிருஷ்டம் நுழையக் கூடுமென்ருே யாரும் எதிர்பார்த்து இருக்க முடியாது. வரலாறு கூறுகின்ற உண்மை எவ்வாறு இருப்பினும், அத்தகைய ஒரு மேல் காட்டு நாகரிகத்தின் மேல் பகைமைக் காற்று வீசக் கூடும் என்பதற்கு வெளிப்படையான அறிகுறிகள் எதுவுமே இருக்கவில்லை. எந்தப்