பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 - முன்னுரை இந்த அனுபவம் எல்லா மனிதர்கட்கும் எல்லாக் காலத்திலும் கிடைத்தற்கரிய, மாற்ற முடியாத ஒன்று என்பது தாகடரின் கருத்து. தாம் மேற்கொண்டுள்ள சமயம் மனித சமயம்’ என்று தாகடர் சில முறை கூறியுள்ளார். அன்-ப் பேருண்ர்வில், மனிதன் என்பவன், ஒரு கூருக உள்ள உணர்வு எனபதைத்தான் அவர் அவ்வாறு கடறினர் போலும். அனைத்துலகிலும் ஆண்டவன் மனித முயற்சியின் மூலமே வெளிப்படுகிருன் என்ற கருத்தை, அவர், ஆண்டவன் மனிதன் மூலமே வெளிப்படுகிருன் என்று கூறியுள் ளார். இந்த அண்டம் தோன்றி வளரும் முறையே ஒரு கூட்டுறவு முறையாகும். இதில் மனிதன் பெறுபவனுக மட்டுமல்லாமல் வழங்கு பவளுகவும் உள்ளான். மனிதனுடைய ஆளுமை என்பது எவ்வாறு அவனுடைய உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் இருக்கிறதோ, அதேபோல, ஒவ்வொரு தனி மனிதனிலும் இறைவன் உறை கின்ருன் என்ற கருத்துடன் அவர் விளையாடிய காலமும் உண்டு. இந்த உயிரணுக்கள் தன்னறிவு பெறுமேயானுல் தாம் தனித் தன்மை பெற்றவை என்று அவை கினைந்துகொள்ளும், அதேபோல மனிதர்களும் தம்மைத் தனித் தன்மை பெற்றவர்கள் என்று கினைத்துக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் ஆண்டவனின் ஆளுமையில் ஒவ்வொரு கணமாகவே உள்ளனர். தாகூரின் சமயக் கொள்கையில் காணப்பட்ட கட்டார்த்தம் (mystic element) அன்ருட வாழ்க்கையில் அவர் எடுத்துக் கொண்ட கவலைக்கு நேரான்தாகும். தனி மனிதன் அல்லது ஓர் இனத்தின் மோட்சம் என்பது, நமது அன்ருட வாழ்க்கைக்கு அப் பாற்பட்ட எங்கோ ஓர் இடத்தில் இல்லை என்றும், நம்முடைய அன்ருட வாழ்வில் அனுபவிக்கும் சுக துக்கங்களிலேயே அடங்கி இருக்கிறதென்றுமுள்ள அவருடைய கம்பிக்கையைத் தொடர்ந்தே, இது வருகிறது. பொது வாழ்வின் மூலந்தான் தனி மனித மோட்ச மும், சமுதாய விடுதலையும் உண்டு என்பதால் மனித உறவில் அதிக அழுத்தந்தந்து பேசினர். சமுதாயமாகிய உயிர்ப் பொருளின் உறுப் பினர்கள் என்ற முறையில் தனி மனிதர்கள் அனைவரும் அவரைப் பொறுத்தவரை உயர்ந்தவர்களாகவே காணப்பட்டனர். ஆகவேதான், ஹிந்து சமய நடைமுறையில் மனிதனுக்கும் மற்ருெரு மனிதனுக்கும் இடையே வேறுபாடு காட்டுவதை அவர் அவ்வளவு வன்மையாகக் கண்டித்தார். தன்னை அறியும் அறிவுபற்றிப் பழங் கால இந்திய ஞானிகள் அதிக அழுத்தங் கொடுத்துக் கூறினர்கள்.