பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 அனைத்துலக மனிதனே நோக்கி களில் நம்முடைய கல்வி முறை ஐரோப்பியக் கல்வி முறையுடன் தொடர்புகொள்ள வில்லையோ, அங்கெல்லாம், ஏற்பட்ட கஷ்டம் கம்முடையதே ஆகும். ஐரோப்பியர்களிடத்தில் நாம் கொண்டிருந்த மதிப்பு அதிர்ச்சி அடையாத வரையில் அந்தக் கட்டுறவு எளிதாக வும், தொடர்ந்தும் இருந்து வந்தது. ஏனென்ருல், நான் முன்னரே கூறியபடி ஐரோப்பாவின்மேல் நாம் கொண்டிருந்த பெரு மதிப்பின் காரணமாகவே அந்தப் புது யுகம் பிறந்தது. அறிவுத் துறையில் அஞ்ஞானம் நீங்கிய பகுத்தறிவுக்கு ஐரோப்பா எவ்வாறு மதிப்புக் கொடுத்தது என்பதையும், நடைமுறை கிகழ்ச்சிகளில் மனித உரிமைக்காக ஐரோப்பா எங்ங்னம் துணை செய்தது என்பதையும் காம் காணவில்லையா? அதே முறையில்தான் எவ்வளவு எதிர்ப்புக் கள் இருந்தபோதிலும் நம்மிடையேயுள்ள சுய மரியாதை வளர்ச்சி அடைந்ததோடு, கம்முடைய மக்களைப் பொறுத்தமட்டிலும் ஒரு புதிய கம்பிக்கையும் பிறந்தது. வலிமையுடையவர்களே, அவர் களுடைய அளவு கோலேக் கொண்டே அளந்து பார்க்கத் தொடங் கிளுேம். கம்முடைய பழைய நாளேய ஆட்சியாளர்களைப் பொறுத்த மட்டில் இத்தகைய ஒர் அளவு கோல் இல்லை யென்பதை ஒத்துக் கொள்ளவேண்டும். அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் அன்புடையவர்களாக இருக்கும்பொழுது, நமக்கு ஏதாவது நன்மைகள் ஏற்பட்டாலொழிய, சாதாரண நீதி முறையையொட்டி அவர்களிடத்தில் எவ்விதமான உரிமையும் கோர முடியாமல் இருந் தோம். ஒரு சாதாரண மனிதனிடம் எதிர்பார்க்கும் இளகிய மனப் பான்மையைக்கூட அவர்களிடம் எதிர்பார்க்க முடியவில்லை. அன்றுமுதல், சரித்திரம் அதனுடைய வழியில் ஓடிக் கொண்டே இருக்கிறது. தன்னுடைய மிக நீண்ட தூக்கத்திலிருந்து ஆசியா விழித்துக்கொள்ளும் அறிகுறிகள் தோன்றியுள்ளன. மேளுடு களோடு தொடர்பும் முரண்பாடும் கொண்ட காரணத்தால் உலக வல்லரசுகளோடு ஒரு சமமான இடத்தை ஜப்பர்ன் பெற்றுள்ளது. ஜப்பானிய தேசம் நிகழ்காலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக் கிறதே தவிர, சென்று போன காலத்தின் அக்தி ஒளியில் தான் வாழவில்லை யென்பதை கிரூபித்து விட்டது. ஏனைய கீழைத் தேசங்களும் அந்தப் புதிய யுகத்தில் கால் வைத்துவிட்டன. உலக வரலாற்றின் இந்தப் புதிய பகுதியில் நாமும் ஒருமைப்பாட்டை அடையலாம் என்று இதுவரையில் எதிர்பார்த்து வந்தோம். அன்றியும், தன்னம்பிக்கை, தன்னறிவு என்ற நம்முடைய வண்டி முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் என்றும், பிரிட்டிஷார்களே