பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறும் யுகம் 401 இதற்கு உதவி செய்வார்கள் என்றும் இதுவரை நம்பி வந்தோம். ஆளுல் இதுவரைக் காத்திருந்த பிறகு, இந்த வண்டியின்சக்கரங்கள் ஓடுவதற்காகச் செய்யப்பட்டவை அல்ல என்பதை அறிந்து கொண்டோம். இந்தியாவிலுள்ள பிரிட்டிஷார்கள் சட்டம், ஒழுங்கு முறை, விதி முறைகள் ஆகியவற்றையே நம்புகிருர்கள். நாட்டின் தேவைக் கேற்றபடி, கல்வி, சுகாதாரம் ஆகியவை வளர்க்கப்பட வில்லை. மக்கள் புதிய செல்வங்களைச் சேகரிப்பதற்கு வாய்ப்புக்கள் இல்லை. எதிர் காலத்திலும் அத்தகைய வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் நம்முடைய ஆதாரங்கள் அனைத்தும் சட்டம், ஒழுங்கு முறை என்ற இரண்டுக்கும் இரை போடவே போத வில்லை. இதில் வேடிக்கை என்னவென்ருல், ஐரோப்பாவோடு இந்தியா கொண்டுள்ள தொடர்புதான், காலம் தருகின்ற இந்தப் பெரும் பயன்களை இந்தியா பயன்படுத்த முடியாமல் செய்துவிட்டது, புதிய யுகத்தின் சூரியப் பிரகாசத்தில்கூட இந்தியா ஒரு கரும்புள்ளி யாகவே இருக்க நேர்ந்துவிட்டது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் ஐக்கிய அமெரிக்காவுக்குப் பெரிதும் கடன்பட்டு உள்ளன. ஆனல் கடன் வாங்கிய இந்த நாடுகள் சட்டத்தையும், ஒழுங்கு முறையையும் கடைப்பிடித்துத் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தைக் குறைத்துக் கொண்டிருக்கக் கூடுமேயானுல், அவைகள் பெற்றுள்ள கடன்கள் இதைப்போல இன்னும் இரண்டு பங்கு இருப்பினும்கூட அவற்றைச் செலுத்த முடியாமல் போகாது. வாழ்க்கைத் தரத்தை மிகுதியாகக் குறைப்பது என்ருல் பொதுவாக உணவைப் பங்கிட்டுக் குறைத் தல், தாகத்தைத் தீர்க்கும் அளவில் ஒரு சொட்டுத் தண்ணீரை மட்டும் பயன்படுத்தல், ஐந்து முதல் ஏழு சதவீதமுள்ள மக்களுக்கு மட்டும் கல்வி வழங்குதல், எலும்போடு ஒட்டியிருக்கின்ற நோய் நொடிகளே மட்டும் பாதுகாக்கின்ற முறையில் சுகாதார அமைப்புக் களைச் செய்தல் என்பவையாம், என்ருலும் நாகரிக வாழ்விற்கு இவ்வாறு குறைத்துக் கொள்ளுதல் என்பது இயலாத காரியம். ஆகவே, கடன் பெற்ற அந்த நாடுகள் துணிவோடு, ' எங்ளுடைய கடன்களே நாங்கள் திருப்பித் தரமாட்டோம் ' என்று கூறுகின்றன. வாழ்க்கையில் அடைய வேண்டிய . تنغسالانة لبابا إلخ தேவைகளில் கின்று, இந்தியாவும் இதேபோல, பொறுக்க முடியாத கிலேயில் ஆட்சித் துறையில் ஏற்படும் இந்த அதிகப்படியான செலவையும், அதனுல் ஏற்படுகின்ற திவால் ஆகும் கிலேயையும் காங்கள் பொறுக்க மாட்டோம். இந்தச் செலவுகள் ஒரு பெரிய பாருங்