பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 அனைத்துலக மனிதனே நோக்கி கல்லப் போல அழுத்தி, எங்களைக் காட்டுமிராண்டித்தனத்திற்கு அழைத்துச் செல்கிறது ' என்று கூறி விடலாம். ஐரோப்பா தானே ஏற்படுத்திய இந்தத் தர அளவைகளே ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்? அகில உலகத்திற்கும் உள்ள பொறுப்பை ஐரோப்பா தானே ஏற்றுக் கொள்ளவில்லேயா ? ஐரோப்பாவின் எல்லைகளுக்கு அப்பால் நாகரிகத்தை ஏந்திக் செல்லும் இந்தச் சுடர் விளக்குகள் ஒளியைக் கொடுப்பதற்கு அல்லாமல் தீ வைப்பதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஆகவேதான், துப்பாக்கிக் குண்டின் உதவி கொண்டு, அபின் உருண்டைகள் சீனவுக்குள் புகுத்தப்பட்டன. இத்தகைய ஒரு கொடுமையான அட்டூழியம் வரலாற்றில் வேறு எங்கும் காணப்படவில்லை. ஒரு வேளை அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பிய மக்கள் பொன்னின் மேல் இருந்த பேராசையின் காரணமாக, அங்கு வாழ்ந்த 'மாயா' மக்க% செய்த கொடுமைகள், நிகழ்த்திய அட்டூழியங்கள் இதற்கு நிகராகலாம். வரலாற்றின் இடைக் காலத்தில் காட்டு மிராண்டித் தனம் நிறைந்த டாட்டார்’ மக்கள் அவர்கள் வெற்றி அடைந்த நாடுகளில், தோற்றவர்களின் மண்டை ஒடுகளே மலே போல் குவித்தார்கள். என்ருலும், அவர்கள் உண்டாக்கிய காயங் கள் ஆறிவிட்டன. ஆனல் நாகரிகம் மிகுந்த ஐரோப்பா மாபெரும் சின் மக்களுடைய தொண்டையின் வழிச் செலுத்திய விஷம், என் றும் தீராத பெரும் துயரத்தை உண்டாக்கிவிட்டது. ஈரான் நாட்டில் இளைஞர் இயக்கம், பன்னூறு ஆண்டுகளாக உறங்கிக் கிடந்த அந்த நாட்டை எழுப்ப நினைத்தவுடன், இந்த வீர இயக்கத்தை நாகரிகம் பெற்ற ஐரோப்பா அழித்த, துயரம் நிறைந்த வரலாற்றை சூஸ்தர்' என்பவர் பர்ஸியாவின் கழுத்தை நெறித்தார்கள் ' என்ற நூலில் எழுதி யுள்ளார். ஆப்பிரிக்காவின் ஒரு மாகாணமாகிய காங்கோவில் ஐரோப்பியர்கள் செய்த கொடுமை பற்றி அனைவரும் அறிவார்கள். இன்று வரையில் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள நீக்ரோக்கள் பெருத்த சமுதாய அவமானத்தைத் தாங்கிக் கொண்டிருக் கிருர்கள். - இதனை அடுத்து, உலக மகா யுத்தம் (முதலாவது வந்தது. உடனே மேனுட்டு வரலாற்றில் தொங்கிக் கொண்டிருந்த திரை கிழிக்கப்பட்டது. ஒரு குடிகாரப் பைத்தியக்காரனே, அவன் ஆடிக் கொண்டிருக்கும் கிலேயில் காட்டியதுபோல் இருந்தது அது. இப்படிப்பட்ட கொடுமை கிறைந்த முரட்டுத்தனம் பழைய இருண்,