பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 அனைத்துலக மனிதனை நோக்கி வதாக இருக்கிறது. இந்த நடைமுறைச் சட்டங்களுக்குப் பதிலாக ஆங்கிலேயர்கள் எவற்றை நாகரிகம் என்று கடறினர்களோ, எவற்றை அவர்களுடைய ஒழுக்கங்களால் எடுத்துக் காட்டிஞர் களோ, அவற்றையே ஒத்துக் கொள்கின்ற அளவுக்கு முற்பட்டோம். என்னுடைய வீட்டில்கட்ட, பகுத்தறிவின் துணை கொண்டு, இந்த மாற்றத்தை முழு மனத்தோடு வரவேற்று நடைமுறையிலும், கொள்கையிலும் ஏற்றுக் கொண்டோம். இத்தகைய ஒரு சூழ்நிலை யில் பிறந்து, இயற்கையாக என் மனத்தில் தோன்றிய இலக்கிய விருப்பத்தினுல் வளர்க்கப்பெற்றமையின், பிரிட்டிஷார்கள் புகழ் படைத்த ஒரு படியில் நிற்பதாக நான் கருதினேன். - என்னுடைய அந்த இளமைக் காலம், என் கனவை கலைத்து, ஏமாற்றத்துடன் முடிந்தது. மிக உயர்ந்த நாகரிக மதிப்புக்களே வாயில்ை பேசுகின்ற இவர்கள் தங்களுடைய தேசீயத் தேவை ஏற்பட்டபொழுது, எவ்வளவு எளிதான முறையில் இந்த நாகரிக மதிப்புக்களே உதறி எறிந்து விடுகிருர்கள் என்பதை நான் காண முடிந்தது. - இலக்கிய ஈடுபாட்டிலிருந்து, என்னைப் பலவந்தமாக புறத்தே இழுத்துக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. ஏனென்ருல், இந்திய மக்களின் கொடுமையான வறுமை என்னுடைய கவனத்தில் வந்து கிலேத்தது. நவீன காலத்தில் உள்ள எந்த நாட்டிலும், அடிப்படைத் தேவைகளைக் கூட மறுக்கின்ற, இந்தக் கொடுமை காணப்படவில்லை என்பதை நான் உணர்ந்தேன். அடிப்படைத் தேவைகள் என்று சொல்லும்பொழுது, உணவு, உடை, கல்வி, சுகாதார வசதிகள் ஆகியவற்றையே நான் குறிப்பிடுகிறேன். என்ருலும்கூட, இந்த காட்டிலிருந்து ஆதாரங்களே வருஷங்தோறும் சுரண் டி சுரண்டிச் சேர்த்துத்தான் பிரிட்டிஷார்களின் செல்வம் வளர்ந்தது. - - பிரிட்டிஷ் பண்பாட்டின் சிறப்பான பகுதிகளிலேயே என்னை இழந்திருந்த நான், மிக நீண்ட காலமாக வைத்திருந்த மதிப்புக்கள், இத்தகைய முறையில் கொலை செய்யப்படும் என்பதை நம்பவே இல்லை. இறுதியாக, நாகரிக த்ேசங்கள், நம்முடைய கோடிக் கணக்கான மக்களிடத்தில் காட்டும் அவமரியாதை, கவலையற்ற தன்மை ஆகியவற்றின் அடையாளம் இவ்வாறு கொலே செய்வது தான், என்பதை உணர்ந்தேன்.