பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 அனைத்துலக மனிதனை நோக்கி டிரியர்கள் இப்போது அடக்கு முறையில் சிக்காமல் இருக்கிருர்கள் என்பதைக் கண்டேன். ஐரோப்பிய அரசியல் சூழ்ச்சிகளிலிருந்து விடுதலை அடைந்ததிலிருந்தே, ஈரான் நாடு, புதிய வாழ்க்கையைத் தொடங்கி விட்டது. என் முழு மனத்துடன் ஈரானுக்கு ஆசி கூறுகிறேன். f நமக்கு அடுத்த தேசமாகிய ஆப்கானிஸ்தானத்தைப் பார்க்கும் பொழுது கல்வி, சமுதாய வளர்ச்சி ஆகிய துறைகளில் இன்னும் அதிகமாக வளர்ச்சி தேவைப்பட்டாலும் கூட, தொடர்ந்து முன்னேற்றம் காண்பதற்குரிய அறிகுறிகள் நிறைந்துள்ளன. ஏனென்ருல், எந்த ஐரோப்பிய வல்லரசும், தன்னுடைய குரல்வளப் பிடிக்குள் ஆப்கானிஸ்தானத்தைக் கொண்டு வர முடியவில்லை. என்ருலும், பிரிட்டிஷ் ஆட்சி என்ற பாருங்கல்லைக் கழுத்தில் கட்டிக் கொண்டு, எவ்வித முயற்சியும் இல்லாமல் இந்தியா உறங்கிக் கிடக்கிறது. இந்த கிலேயில், மற்ருெரு பழமையான நாகரிகத்தையுடைய மாபெரும் நாட்டின் வரலாற்றை, அதாவது சீனுவின் வரலாற்றை இப்பொழுது கினைக்கிறேன் ; பிரிட்டிஷார்கள் சீன மக்களுக்குக் கஞ்சாவைக் கொடுத்து ஏமாற்றி, கொஞ்சங் கொஞ்சமாக நாடு பிடிக்கும் ஆசையைப் பூர்த்தி செய்து கொண் டார்கள். இந்தக் கொடிய நிகழ்ச்சிகளின் நினைவு மங்குவதற் குள்ளாக மற்ருெரு கொடுமை இழைக்கப்பட்டது. வட சீனவை ஜப்பான் விழுங்கத் தொடங்கியது. என்ருலும், இந்தத் தறிதலைச் செயலை ஏதோ ஒரு சாதாரண நிகழ்ச்சி என்று பிரிட்டிஷ் ராஜ தந்திரிகள் ஒதுக்கி விட்டார்கள். பிற்காலத்தில் இதே ராஜதந்திரிகள் ஸ்பெயின் காட்டு ஜனநாயகத்தை உடைப்பதற்குத் தந்திரமாக உதவி புரிந்தனர். - இதன் எதிராக, வீரம் வாய்ந்த சில ஆங்கிலேயர்கள் ஸ்பெயின் நாட்டின் விடுதலைக்குப் போராடி உயிர் விட்டதையும் நான் கண்டேன். ஆல்ை, ஆசிய நாடாகிய சீனு போன்ற ஒரு நாடு இத்தயை ஆயத்தில் இருக்கும்பொழுது, ஆங்கில மக்களுடைய மனத்தில் இதே போன்ற பரந்த கருணை தோன்றவில்லை யென்பதும் உண்மைதான். என்ருலும்கூட, ஒர் ஐரோப்பிய ஜனநாயகம் துன்பத்தில் ஆழ்ந்தபொழுது, வீரத்தோடு தங்களேயே தியாகம் செய்து கொண்ட அந்த ஆங்கிலேயர்களின் ஆன்மா, நான் எந்த ஒரு பண்பாட்டிற்கு முன்பே மரியாதை செலுத்தினேனே, அங் தப் பண்பாட்டையே காட்டி கிற்கிறது. இவை இரண்டிற்குமுள்ள வேறுபாடு, மிகுந்த ஆற்றலுடன் என்னைத் தாக்கியதனுல்தான்,