பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 அனைத்துலக மனிதன்ே நோக்கி அவருடைய பெருமை, இன்னும் ஒளி விட்டு விளங்குகிறது. அன்பாலும், பக்தியாலும் தூண்டப்பெற்று ஆண்ட்ரூஸ் செய்த காரியங்களுக்கு இந்தியாவில் உள்ளவர்களாகிய நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். தனிப்பட்ட முறையில் பேசும்போது, கீழ் கண்ட காரணத்திற்காக ஆண்ட்ரூஸிற்கு நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன். ஆங்கில இலக்கியத்தைப் படித்துவிட்டு, பிரிட்டிஷ் மக்களிடம் கான் இளமைக் காலத்தில் கொண்டிருந்த மதிப்பை, முதுமைக் காலத்தில் இழந்து விட்டேன் என்ருலும் அந்த இழந்த பகுதிகளுள் ஒரு சிலவற்றை மீட்பதற்கு அவர் உதவியுள்ளார். பிரிட்டிஷ் மக்களின் இருதயத்திலுள்ள பெருந்தன்மையை நாம் ஓயாமல் கினைப்பதற்கு ஆண்ட்ரூஸின் கினைவு உதவுகிறது. அவரை ஒத்த மனிதர்களேயே மிக நெருங்கிய நண்பர்களாக நான் கொண்டிருந்தேன். அன்றியும் அவர்கள் மானிட சமுதாயம் முழுவதற்கும் நண்பர்களாக இருந்தார்கள். அத்தகைய மனிதர் களே நண்பர்களாகப் பெற்றிருந்தது என் வாழ்வை வளப்படுத்து வதற்கு மிகவும் உதவிற்று. பிரிட்டிஷாரின் கெளரவம் பாறையில் தாக்கி மோதிவிடாமல் காக்கின்றவர்கள் ஆண்ட்ரூஸ் போன்ற வர்களே! எவ்வாறு இருப்பினும், அவர் போன்றவர்களே நான் காணுமலும், அறியாமலும் இருந்திருப்பின், மேட்ைடார் நாகரி கத்தில் நான் கொண்ட ஏமாற்றம் மாற்றம் இல்லாமலே முடிங் திருக்கும். - - இந்த இடைக்காலத்தில், திறந்த வாயிலுள்ள கோரைப் பற்களோடும், கூர்மையான நகங்களோடும், கொடுமையைப் பரப்பிக் கொண்டும், மற்ருெரு காட்டுமிராண்டித்தனம் ஐரோப்பா வில் பவனி வருகிறது. அந்தக் கண்டத்தின் ஒரு மூலையிலிருந்து மற்ருெரு மூலைவரை அடக்கு முறையின் புகை, காற்றைக்கூட விஷத்தன்மை உடையதாக ஆக்குகிறது. மேனுட்டாரின் மனே தத்துவத்தில் அடங்கி இருக்கின்ற பலாத்கார உணர்ச்சி இன்று வெளிப்பட்டு, மனிதனுடைய ஆன்மாவையே மாசுப்படுத்தத் தொடங்கி விட்டது. - என்ருவது ஒரு நாள் இந்திய சாம்ராஜ்யத்தை விட்டுவிடுமாறு, அதிருஷ்டச் சக்கரத்தின் சுற்றல், பிரிட்டனேக் கட்டாயப்படுத்த நேரிடலாம். அப்பொழுது எத்தகைய இந்தியாவை அவர்கள் பின்னே விட்டுச் செல்ல நேரிடும்? எவ்வளவு அப்பட்டமான வறு மையை அவர்கள் விட்டுச் செல்ல நேரிடும்? இரண்டு நூற்ருண்டு களாக கடை பெற்ற அவர்களுடைய ஆட்சி ஆறு வறண்டு