பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 - முன்னுரை மனிதனை நோக்கிச் செல்லும் யாத்திரையில் தாகூர் கொண்ட கம்பிக்கையைத் தான் இந்தப் பாடல் கடறுகிறது. VI இறுதியாக, இந்த நவீன உலகைப் பொறுத்தமட்டில் தாகூரின் முக்கியத்துவம் என்ன என்று கேட்கப்படலாம். தலையாய அர சியல் அல்லது சமுதாய சீர்திருத்தக்காரர் அல்லது கல்வியாளர் என்று அவரைக் கூறமுடியாது. எனினும், இந்த ஒவ்வொரு துறை யிலும் அவர் தம் சிறந்த கருத்துக்களை ஈந்திருக்கிருர் என்பதையே இக் கட்டுரைகள் காட்டுகின்றன. அவர், தலையாய கவியும், எழுத் தாளருமாவார். தம் காலத்துக்கும் தம் மக்களுக்கும் மட்டுமல்லாமல் எல்லா மக்களுக்கும், எல்லாக் காலத்துக்கும் உதவும் கருத்துக் களைக் கூறும் கலைஞர்களில் அவரும் ஒருவர். எல்லாவற்றிற்கும் மேலாக, இவற்றின் காரணமாக, இவற்றின் காரணமாகவே, அவர் மிகப் பெரிய தேசீயப் பெரியாராகவும், உலகப் பெரியாராகவும் விளங்கினர். அனைத்துலகத் தன்மையை நோக்கி அவர் ஓயாது செய்த முயற்சிகள், நவீன காலத்தின் மிகப் பெரிய பிரச்ஆனகளின் முடிவு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைக் காட்டுகின்றன. கீதாஞ்சலியின் எளிமையும் கபடற்ற நேர்மையும், ஐரோப் பாவைப் புயல்போலத் தாக்கின. மனிதனுக்கு மரணத்தையும், அழிவையும் காட்டி அச்சுறுத்துகின்ற பூசலுக்கும், போராட்டத் திற்கும் இடையே சத்தியத்தின் ஒலியை எழுப்புகின்ற ஒரு மனிதக் குரல் கேட்டது. போரினல் களத்துப்போயிருந்த மானிட சமுதா -யத்தின் இருதயத்தில் தாகூர் விடுத்த செய்தி உடன் சென்று தைத்தது. முதல் உலகப்போர்க் காலத்திலும், அதனை அடுத்த சில ஆண்டுகளிலும், ஞானி என்றும், தீர்க்கதரிசி என்றும் மேளுடு அவரைப் பாராட்டிற்று. பத்தாண்டுகள் வரையில் பக்தி செலுத் தும் அளவுக்குப் போற்றிய பிறகு, மேல் நாடுகளில் அவருடைய புகழ் மங்கத் தொடங்கியது. முழு வளர்ச்சியடைந்த ஆண்கட்கும் பெண்கட்கும் திருப்தி அளிக்கமுடியாத அளவில், அவருடைய பாடல்கள் ஆழமற்றுள்ளன என்று சிலர் கூறினர். வேறு சிலர் அவருடைய கவிதைகளில் மனத்தை உருக்கும் இயல்பு ஒரளவுள்ள தென்றும், தொடக்கத்தில் அவை எவ்வளவுதான் விரும்பத்தகுந்த வையாக இருப்பினும் முடிவில் ஓரளவு சுவையைக் குறைத்துவிடு கின்றன என்றுங் கூறினர். அவருடைய பேச்சுக்களும், கட்டுரை களும் அளவு மீறிப் பயன்தருபவையாய், ஒழுக்கம் போதிப்பவை