பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. முன்னுரை 3 I யாய், மந்தமுள்ளவையாய் உள்ளன என்றும் கூறினர்கள். அன்றி யும், இடை இடையே காணப்பட்ட கவிதை உருவகம், அழகிய சொற்ருெடர் என்பவை இருப்பினும், திருப்பித் திருப்பிக் கூறும் இயல்பும், முக்கியமற்றதை முக்கியம் போலக் கூறும் இயல்பும் அவற்றில் மிகுதியும் உள்ளன என்றுங் கடறினர். தாகடரைப்பற்றிப் பேச வந்த நவீன விரும்பிகள் அவர் எவ்வளவுதான் மனித உயர் வுக்கு உண்மையாக முயன்ருலும் அவருடைய கவிதைகளில் ஆழம், உணர்ச்சி என்பவை இல்லை என்றும் அவருடைய கட்டுரை கள் பனிப்படலம் போல் தெளிவற்றும், நீண்டும், தருக்க முறைக்கு மாறுபட்டும், உள்ளன என்றும் கடறிஞர்கள். கவிஞர் என்ற முறையில் தாகடரின் இடம் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் தெளிவாகிவிட்டபடியால் அவருடைய திறனய் வாளர்கள் அவரைப்பற்றிக் கூறியுள்ள குற்றச்சாட்டுகட்கு விடை கடறவேண்டிய தேவையே இல்லை. என்ருலும், இந்த மலர், அவ ருடைய கட்டுரைகள் பற்றியதாகையால், இந்தத் திறனுய்வுகள் எந்த அளவிற்குப் பொருந்தும் என்பதை இவற்றைக் கற்போர். மேட்டுமே முடிவு செய்யவேண்டும். ஒன்றைமட்டும் முதலிலேயே ஒத்துக்கொண்டு விடலாம். அவருடைய காட்டு மக்கள் கிடந்த ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அவர்களேத் தட்டி எழுப்பும் நோக்குடன் இக் கட்டுரைகளில் பல தோன்றின. இடைக்கால மனநிலையில் கிடந்த அவருடைய நாட்டு மக்களைத் தட்டி எழுப்பி, நவீன மன. கிலேயை உண்டாக்குவதற்காக, ஒரு தனி மனிதர், தாம் ஒருவராகவே ஒரு தலைமுறையில் நிகழ்த்திய பெரு முயற்சியைக் குறிக்கின்றன இவை. திருப்பித் திருப்பிச் சொல்லும் இயல்பும், ஒழுக்கம் போதிக் கும் இயல்பும் அவற்றில் காணப்படுவதற்குரிய காரணங்கள் இவை களே. இந்தியாவிலும், பிற இடங்களிலும் அவருடைய காலத்தில் வாழ்ந்தவர்களுடைய எழுத்திலும் இவற்றைக் காணலாம், இவை அனைத்திலும் &ುಖTತ அவற்றின் சிறப்பையும், தனித் தன்மையை μμό எடுத்துக்காட்டுவது, மாச்சரியமும், மன வ்ெறுப்பும் அக் கட்டுரைகளில் ஒரு சிறிதும் இல்லாதிருக்கும் சிறப்புத்தான். தாகூரின் இளமை வாழ்க்கை முழுவதும், தோன்றி வளர்ந்து வருகின்ற இந்திய தேசியத்தின் சூழ்நிலையில் கழிக்கப்பட்டதை காம் அடிக்கடி மறந்துவிடுகிருேம். பிரிட்டிஷார்கள் இந்தியாவிற்கு வாதது ஒரு புரட்சிக்கு அடிகோலிற்று. அப் புரட்சி பழைய சமு தாய, சமய நம்பிக்கைகளைத் தாக்கியதோடு விட்டுவிடாமல் மேலும்