பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரைகள் 437. மாதம் 6-ஆம் தேதி காந்திஜி ஒத்துழையாம்ை இயக்கம் பற்றிக் கலங் தாலோசிப்பதற்காகத் தாகரைக் கல்கத்தாவில் தனிப்பட்ட முறை யில் சந்தித்தார். இதுபற்றி அவர்களிடையே இருந்த எண்ன வேறுபாடுகள் மிகப் பெரிதாக இருந்தமையால், அறிவுக் கொத்த முறையில் ஒரு, பொது முடிவைப் பெறுவது மிகக் கடினமாக இருந்தது. என்ருலும், கட்பு முறையில் எவ்விதமான பிளவும் ஏற்படாமல் அவர்களால் இருக்க முடிந்தது ' என்று கூறப்படு கிறது. சத்தியத்தின் அழைப்பு’ என்ற இந்தக் கட்டுரைக்கு மறுப்புக் கூறும் முறையில் காந்திஜி பெருங் காவலன் ’ (யங் இந்தியா, அக்டோபர் 13, 1921) என்ற கட்டுரையை எழுதிஞர். இக் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று ' சத்தி யத்தின் அழைப்பு’’ என்ற தலைப்புடன் மாடர்ன் ரெவ்யூ வில் அக்டோபர், 1921) வெளி வந்தது. 1. மாயை - இருப்பின் பொய்யான அல்லது ஏமாற்றமான ஒரு பகுதி. ஹிந்து தத்துவத்தின் ஒரு கொள்கையாகும். 2. சாத்திரம் - தெய்வீக நூல்கள். - 3. ரக்த வீஜா - பிசாசுத் தலைவன். அவன் உடம்பிலிருந்து - சொட்டுகின்ற ஒவ்வொரு சொட்டு இரத்தமும் அவனைப் போன்ற ஒரு பிசாசை உற்பத்தி செய்ய முடியும் என்று புராணங்கள் கூறுகின்றன. 4. நாம் விரும்பிய...செய்கிருேம்-யாக்ஞவல்கியரது ப்ரகதா ரண்யஹ உபநிஷதம் 4-5-6. 5. மரணத்தின் வாயில் . . . இளைஞர்கள் - கல்கத்தாவிலுள்ள மனிகொத்தளாவில் வெடி குண்டுகள் தயாரித்ததற்காகப் பரீந்திரகுமார் கோஷ் என்பவர் தூக்குத் தண்டனை விதிக் கப்பட்டார். பிறகு அவருடைய தண்டனை தீவாந்திர - சிகூைடியாக மாற்றப்பட்டு, அவரும் அவருடைய கூட்டத் தாரும் அந்தமானுக்கு அனுப்பப்பெற்றனர். 6. மனு - பழங்கால இந்தியாவில் வாழ்க்கை முறைச் சட்டம் வகுததவா. 7. இயக்கம் - காந்திஜியால் 1920, ஆகஸ்டில் தோற்றுவிக்கப் பெற்ற ஒத்துழையாமை இயக்கம். 8. வெளிநாட்டிலிருந்த என் காதுக்கு எட்டியது - இது தாகடரின் ஐரோப்பிய, அமெரிக்க (மே, 1920 - ஜூலை 1921) 'யாத்திரை பற்றிய குறிப்பாகும். -