பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 அனைத்துலக மனிதன நோக்கி 9. வெளி . . . செயல் - ஒத்துழையாமை இயக்கத்தின் போது - லன்காஷயர் ஆலைகளில் தயாரிக்கப்பட்ட துணிகளைக் கொளுத்துவது தேசபக்திக் குரிய செயலாகக் கருதப் பட்டது. 10. சத்தியத்தில் . . . . முடியாது-முண்டக உட்கிஷதம் - 8-1-6. 11. ஒரு குறிப்பிட்ட நாளில் - இந்திய தேசீயக் காங்கிரஸின் நாகபுரிக் கட்டத்தில் (1920) காந்திஜீ தம்முடைய ஒத் துழையாமை இயக்கத் திட்டத்தைத் தலைவர்களின் எதிரே வைத்து, அதனை அப்படியே கடைப்பிடித்தால் ஒரே வருஷத்தில் சுய ராஜ்யத்தை அடைந்துவிட முடியும்’ என்று உறுதி கூறிஞர். "யங் இந்தியா வில் (பிப்ரவரி, 28-1921) காந்திஜி கூறியதாவது: " ஒரு குறிப்பிட்ட எளிய சில நிபந்தனைகளே நிறைவேற்றக்கூடுமே யாளுல் அடுத்த அக்டோபருக்குள்ளாக சுய ராஜ்யத்தை எளிதாக அடைந்து விடலாம். சென்ற செப்டம்பர் மாதத்தில் ஒரு வருஷம் என்று நான் ஏன் குறிப்பிட்டேன் என்ருல் இந்த நிபந்தனைகள் நம்ப முடியாத அளவுக்கு எளிமையான தாகவும், நாட்டிலிருந்த ஏற்றுக்கொள்ளும் மனநிலை மிகச் சிறந்ததாகவும் இருந்ததனுலேயே யாகும் ’’. 12. வைணிகன் - இந்திய இசையை இசைக்கக் கட்டிய ஒரு கடுமை யான கம்பி வாத்தியமே வீணை. அதனை இசைப்பவன் ; : . . . வைணிகன். 13. தாய் - அதிகத் துணிகளைத் தேவையாகப் பெற்றுள்ள - இந்தியத்தாய். . . 14. அரசியல் சீர்திருத்தம்-1919-ல் தோன்றிய மாண்டேகு - - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள். இந்தியத் தேசீயவாதிகள் எதிர்பார்த்த அளவுக்குக் குறைந்தே இருந்தன. இவைகள். 15. இந்தப் புதிய... வேண்டாவா ? ஸ்வேதஸ்வதார உபநிஷதம் - 4-1. سیاسیسw.s---سw-wس-- சுய ராஜ்யத்திற்கு உழைத்தல் 1925 - செப்டம்பரில் எழுதப்பட்டது. சபுஜ் பத்ரா வில் - (செப்டம்பர், 1925) வெளியிடப்பட்டு, கலாந்தார் (1987) என்ற நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.