பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரைகள் 439 பெல்காமில் (1924) கூடிய இந்தியத் தேசீயக் காங்கிரஸ், பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடும் ஓர் ஆயுதமாக சர்க்காவில் நூல் நூற்கும் திட்டத்தை ஏற்றுக் கொண்டது. 1925 மே மாதம் 29-ம் தேதி காந்திஜி சாக்தி நிகேதனத்தில் தாகரைச் சந்தித்து, சர்க்காவைப் பற்றியதம்முடைய தத்துவத்தை ஆராய்வதற்கு வந்து சேர்ந்தார். கவிஞர் இக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் தன் னுடைய கருத்தை இக் கட்டுரையின் மூலம் வெளியிட்டார். இக் கட்டுர்ைக்கு மறுப்பாக காந்திஜி " கவிஞரும் சர்க்காவும்’ என்ற கட்டுரையை யங் இந்தியா வில் (நவம்பர், 1925) வெளியிட்டார். 1925 டிசம்பர் 27-ம் தேதியன்று தாகூர் காந்திஜீக்குக் கீழ்வருமாறு எழுதினர்:

  • தாங்கள் சாத்தியம் என்று கினைக்கின்ற ஒன்றுக்காக என்னைக் கடுமையாகத் தாக்க கேர்ந்தாலும், காம் ஒருவருக் கொருவர் கொண்டுள்ள பரஸ்பர மதிப்பின் மேல் கட்டப் பெற்றுள்ள கம்முடைய உறவுமுறை இத் தாக்குதலைத் தாங்கிக் கொள்ளும்.’ r -

இக் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று சுய ராஜ்யத்திற்கு உழைத்தல் ” என்ற தலைப்பில் மாடர்ன் ரெவ்யூ ’ வில் (டிசம்பர், 1925) வெளியாயிற்று. 1. சுயராஜ்யம் - இதனுடைய நேரான பொருள் தம்மைத் தாமே ஆண்டுகொள்வது என்பதாகும். சுய ராஜ்யக் கிளர்ச் சியின் தொடக்க நாட்களில் இச் சொல் இப் பொருளை ஏற்றுக் கொண்டது. 2. சர்க்கா - காகபுரி காங்கிரஸில் (1920) ஓராண்டு காலத் - திற்குள் சுய ராஜ்யம் அடையும் வழி என்று காந்திஜி சமர்ப்பித்த திட்டத்தில் ஒவ்வொரு விட்டிலும் சர்க் காவைப் புகுத்தி நம்முடைய தேவை முழுவதை:ம் கிராம நெசவாளர்களின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் ' என்பதும் ஒன்று. 3. மேற்பகுதிக் கிராமங்கள்-கிழக்குப் பகுதிகளில் வசிக்கின்ற மக்களுக்குப் பீகாரும், உத்திரப் பிரதேசமும் மேற்பகுதி காடுகளாகும். 4. கிலாபத் இயக்கம்-காலிபைட் என்ற வார்த்தைக்குக் கிலாபாத் ,ன்ேபது அராபிய வார்த்தையாகும். உலகத்திலுள்ள ‘முஸ்லீம்கள் அனைவருக்கும் துருக்கி சுல்தானே காலிப்