பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 அனைத்துலக மனிதனை நோக்கி ஆவார். முதல் உலகப் போரின் முடிவில் துருக்கி தோற்கடிக்கப்பட்டவுடன் இஸ்லாத்தின் புண்ணிய பூமி காலிப்புகளிடமிருந்து எடுக்கப்பட்டு, பிரிட்டிஷ் பொம் மைகளின் ஆட்சியின் கீழ்க் கொண்டு வரப்பட்டது. இந்திய முஸ்லீம்கள் இதனை வெறுத்திார்கள். அமிர்த சரஸ் (1919) காங்கிரஸ் கடட்டத்தில், சமாதான உடன் படிக்கையின் ஷரத்துக்களை மாற்றியமைக்க வேண்டு மென்று செய்யப்பட்ட கிலாபத் கிளர்ச்சியில் பங்கு கொள்ள வேண்டுமென்று, காங்கிரஸ் முடிவு செய்தது. கமால் பசஷாவின் கீழ், சமயச் சார்பற்ற ஒரு நாடாக 1913 வாக்கில் துருக்கி ஆனபோதுதான் இக் கிளர்ச்சி ஒய்ந்தது. . - 5. மகாத்மா - இச் சொல்லின் நேரான பொருள் மா பெரும் ஆன்மா என்பதாகும். 1919 வாக்கில் இச் சிறப்புப் பெயர் மூலமாகவே காந்திஜியை அனைவரும் அறியத் தொடங்கினர்கள். - கவிஞன் நிறுவிய பள்ளிக்கூடம் விசுவ பாரதி முத் திங்கள் இதழில் 1926 அக்டோபர் மாதம் ஒரு கட்டுரையாக வெளியிடப்பட்டது. (பழைய தொகுப்பு வால்யூம் VI எண் 3 1928 டிசம்பரில் விசுவ பாரதித் துண்டுப் பிரசுரமாக வெளிடப்பட்டது.) 1. குளிர் காலம் - சாந்தி நிகேதனக் பள்ளிக்கட்டம் 1901 டிசம்பர் 22-ல் தொடங்கப் பெற்றது. 2. காளிதாசன் - பழங்கால இந்தியாவின் தலையாய கவிஞன். சாகுந்தலம், மேகதூதம் போன்ற நூல்களின் ஆசிரியன். 3. சமவெளி - மத்திய இந்தியாவின் சமவெளிப் பிரதேசங்களி லுள்ள உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த விக்கிரமாதித்தனுக்கு (4-ம் நூற்ருண்டு) அரசவைக் கவிஞகைக் காளிதாசன் இருந்தான் என்று கர்ண பரம் பகக் கதைகள் கொல்லுகின்றன. 4. மேகதூதம் - இச் சொல்லின் கேர்ப்பொருள் மேகமாகிய தூதன் என்பதாகும். மிக நீண்ட இந்தக் கவிதை தேசப் பிரஷ்டம் செய்யப்பட்ட ஒரு காதலன், மலை நாட்டில் வாழ்கின்ற தன் காதலிக்குத் தூது அனுப்புவதாக அமைந்துள்ளது. - *