பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 35 லுள்ள மக்களும் சுதந்திரம் பெறுவதைக் காட்டிலும், அவை ன்றற்கொன்று உதவிக் கொண்டு வாழ்வதே வாழ்வின் கொள்கை ாகவும், வளர்ச்சியாகவும் இன்றும் நாளேயும் இருக்க வேண்டு மன்று அவர் பறை சாற்றினர். - Tமுழு உலகைப்பற்றி, நாளும் நாளும் அதிகமாக -- அவர் கொண்ட கவலையில், இந்தியாவைப் பற்றியும் ஒன்றை உணர்ந்தார். அனைத்துலக மானிடப் பண்பாட்டிற்கு இந்தியா தன் பங்கைச் செலுத்த வேண்டுமானுல் எல்லா பிரச்னைகளேயும் ஆக்க முறையில், உடன்பாட்டு வகையில் அணுக வேண்டும் என்றும் உணர்ந்தார். அவர் கருத்துப்படி, ஏற்றுக்கொள்வதுதான், வாழ்வின் அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர, ஒதுக்கல், அடிப்படைக் கொள்கையாக அமையக் கூடாது. ஆனால், அதே நேரத்தில் இறந்தவற்றை ஒதுக்கியே தீர வேண்டும் என்று வாழ்வு விரும்பு கிறது. இந்திய வாழ்விலும், பழக்கத்திலும் காணப்பட்ட இறந்த வற்றையும், எதிர்ச் செயல் கொள்கைகளையும் தாக்க அவர் பின் வாங்கியதே இல்லை. மேனுட்டு நாகரிகத்தில் காணப்படும் வலிமையற்ற பகுதிகளையும் எதிர்த்துக் கூற அவர் தயங்கவில்லை. கீழை நாடுகளிற் காணப்படும் சோம்பர், குருட்டு கம்பிக்கை ஆகிய வற்றைத் தாக்கிய அதே நேரத்தில் மேனுட்டினரின் அளவு மீறிய தேசீயத்தையும், லெளகீகப் பொருள்கள் மேல் அவர்கட்குள்ள பற்றையும் கண்டித்தார். உண்மையானதும், புதுமையானதுமான மானிட நாகரிகம் ஐரோப்பாவின் மத்தியிலிருந்து பிறக்கும் என அவர் தொடக்கத்தில் கம்பினர். அவர் எழுதியுள்ள கடைசிக் கட்டுரையில் மேனுட்டின் மேல் தாம் கொண்டிருந்த கம்பிக்கை தகர்ந்து விட்டதாக வருத்தத்துடன் கூறியுள்ளார். தாகரின் இக் கூற்று மேனுட்டுத் தாகூர்த் திறய்ைவாளர் சிலரின் மனத்தைப் புண்படுத்தியுள்ளது என்ருலும், இந்தியாவிலுள்ள தம் நண்பர்கள் பலரையும் கருணை இன்றிக் குறை கூறியுள்ளார் என்பதை அவர் கள் மறந்து விட்டனர். மகாத்மா காந்தியிடம் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்துங்கட்ட, சில குறிப்பிட்ட பிரச்னைகளில் வலுவாக அவரைக் கண்டித்துள்ளார். மேகுட்டின் மேல் அளவிலா மதிப்பு வைத்திருந்துங்கட, தேசீய கர்வத்துக்கும், லெளகீக செல்வத் துக்கும் அவர்கள் எல்லேயற்ற மதிப்புத் தருவதைக் கண்டு கண்டித் துள்ளார். எவ்வாறு இருப்பினும் மனிதனிடம் தாம் கொண்டிருக்கும் கம்பிக்கையைத் தாகூர் இழக்கவில்லை. மகாத்மாவைக் குறை