பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அனைத்துலக மனிதனை நோக்கி தில்லை. பிறர் யாரேனும் நம்மைக் கண்டு சிரித்தால் இன்னும் ஆணித்தரமாகப் பேசி அவர்களைக் கவர முயல்கிருேம். கம்முடைய கல்வி நம்முடைய வாழ்க்கையோடு பொருந்த வில்லை. நாம் கற்கும் நூல்கள் நம்முடைய வீடுகள் பற்றியோ நம்முடைய சமுதாயத்தின் குறிக்கோள்பற்றியோ ஒன்றும் கூறுவ தில்லை. நமது அன்ருட வாழ்வில் செய்யும் முயற்சிகள் பற்றி இந் நூல்களில் ஒன்றும் இல்லை. நம்முடைய நண்பர்கள் அல்லது சுற்றத்தார்கள், கமது ஆகாயம், நமது கிலம், நமது காலே அல்லது மாலை, நமது விளைகிலம், ஆறுகள் ஆகிய எவை பற்றியும் அந்நூல் களில் ஒன்றுங் காணப்படுவதில்லை. இத்தகைய சூழ்நிலையில் கல்வியும் வாழ்க்கையும் ஒன்ருக இரா; இடையில் ஒரு குறுக்குச் சுவருடன் இவை இரண்டும் தனித்தே கிற்கும். நாம் பெறும் கல்வி கம்முடைய வேருக்கு அப்பால் வெகு தூரத்தில் பெய்கின்ற மழை யாகவே இருக்கும். வேரைப் பிரிக்கும் மண்ணத் தாண்டி மழை செல்ல முடியாத நிலையில், அது நம் தாகம் தணிக்க முடியாமல், இருக்கிறது. - . இந்த நாட்டைப் பொறுத்தவரை, வாழ்க்கையையும் கல்வி யையும் பிரிக்கும் குறுக்குச் சுவர் கடக்க முடியாமல் இருப்பதால், இவை இரண்டயுைம் சேர்த்தல் இயலாது. இவை இரண்டின் இடையே ஒரு பகைமை வளர்வதே, அடிக்கடி விளேயும் பயணுகும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நாம் கற்கின்ற பாடங்களே, கம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கை ஒவ்வொரு படியிலும் மறுத்து கிற்பதால், நாம் கற்பவை மீது அவநம்பிக்கையும், வெறுப்பும் வளரத் தொடங்கி விடுகின்றன. நாம் அரைகுறை உண்மைகளையே கற்றுக் கொள்கிருேம் என்ற எண்ணம் உண்டாகிறது; ஐரோப்பிய நாகரிகமே அரைகுறை உண்மைகளின்மேல்தான் கட்டப் பட்டுள்ளது எனறும் கருதுகிருேம். இந்திய நாகரிகம் எத்தியத்தின் மேல் கட்டப்பட்டுள்ளதென்றும் நம்முடைய கல்வி மகிழ்சியூட்டு இன்த பொய்யில் தான் கொண்டுவிடும் என்றும் கருதுகிருேம், ஐரோப்பியக் கல்வி நமக்குப் பயன்படாமல் போவதற்குரிய காரணத்தை அக் கல்வியில் தேடியலேந்து பயனில்லே. அதனெதிராக நம்முடைய வாழ்க்கையில் காணப்படும் பொருத்தமற்ற சூழ்நிலையில் தான் காண முற்பட வேண்டும். என்ருலும், ஐரோப்பியக் கல்வி நமக்குப் பயன்படவில்லை என்றே கூறுகிருேம். ஏனென்ருல், தோல்வி என்பது அதனுடைய இயல்பிலேயே அமைந்து கிட்க்