பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியின் மாறுபாடுகள் - 全7 கிறது. நர்ம் எவ்வளவுக் கெவ்வளவு அழுத்தமாக அக் கல்வியை வெறுக்கிருேமோ, அவ்வளவுக் கவ்வளவு குறைந்த அளவிலேயே அது நமக்கு நன்மை செய்கிறது. எனவே, நமது வாழ்க்கைக்கும் கல்விக்கும் இடையே உள்ள போராட்டம் வலுப்படுகிறது. இவை இரண்டும் பிரிந்து செல்லச் செல்ல, நம் வாழ்நாளே ஒரு மேடையாக மாறி, அதில் இவை ஒன்றுக் கொன்று நாடகப் பாத்திரங்கள் போல் கேலி செய்து கொண்டும், ஒன்றை யொன்று தாழ்த்திக் கொண்டும் பொழுதைக் கழிக்கின்றன. கல்வியையும் வாழ்க்கையையும் எவ்வாறு ஒன்றுபடுத்துவது என்பதே இன்று நம்மிடையே காணப்படும் முக்கியமான பிரச்ஆன யாகும். இந்த ஒற்றுமையை, வங்காளி மொழியும் இலக்கியமுமே உண்டாக்க முடியும். பக்கிம் சந்திர சட்டர்ஜியின் இதழாகிய பங்க தர்சன்’ வங்காள இலக்கிய ஆகாயத்தில் ஒரு புதிய நாள் தோன்றுவது போலத் தோன்றியதை நாம் அறிவோம். கற்றறி வுடையவர்கள் அனைவர்க்கும் அது ஏன் திருப்தியை அளித்தது? ஐரோப்பியத் தத்துவம், சரித்திரம், அல்லது விஞ்ஞானம் ஆகிய வற்றில் இதுவரைக் காணப்படாத உண்மை எதையேனும் அந்த இதழ் வெளியிட்டதா? பங்கதர்சன்’ என்ற கருவியின் மூலமாக் ஒரு பேரறிஞர் நம்முடைய கல்விக்கும் வாழ்வுக்கும் இடையே இருந்த குறுக்குச் சுவரை உடைத்தெறிந்து, நம் அறிவுக்கும், இருதயத் திற்கும் இடையே உறவை உண்டாக்கினர். அதுவரை ஐரோப்பியப் பண்பாடு நமக்கு அக்கியமாகவே இருந்து வந்தது. இந்தப் பொருளைத் தான் பங்கதர்சன் நம்முடைய வீட்டிற்குள் கொண்டு வந்தது. அதல்ை காம் கம்மையே ஒரு புதிய ஒளியில் காண முடிந்தது. ‘சூர்யமுகி, கமலமணி” ஆகிய பாத்திரங்களின் மூலம் நம்முடைய பெண்கள் எவ்வாறு உள்ளனர் என்பதைப் பங்கதர்சன் காட்டிற்று. 'சந்திரசேகர்', 'பிரதாப் ஆகிய பாத்திரங்களின் மூலம் வங்காளி ஆண்மையின் இலட்சியத்தை உயர்த்திற்று. கமது அன்ருட வாழ்க் . கையின் சிறு சிறு அலுவல்களில் புகழ் ஒளியைப் பாய்ச்சிற்று. 'பங்கதர்சன்’ மூலம நாம் பெற்ற ಅಥ್ರಕ அன்றுள்ள கற்றறி வுடைய வங்காளிகளேத் தம் தாய்மொழியில் எழுதுமாறு தூண்டிற்று. ஆங்கிலம் அவர்களுடைய தொழில் முறைக்கு உதவுமே தவிர, இலக்கிய காரியங்கட்கு உதவாது என்பதை உணர்த்திற்று. இந்த கர்ட்டில், எவ்வளவு கவலை எடுத்துக் கொண்டு ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டாலும், நீண்ட காலம் வாழ வேண்டிய நூல்கள்