பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அனைத்துலக மனிதனை நோக்கி வங்காளி மொழியில் தான் எழுதப்பெற வேண்டும் என்பதையும் அவர்கள் அறிந்தனர். இதற்குரிய முக்கிய காரணம் என்ன வென்ருல், ஒரு வங்காளி தன் மனத்தில் தோன்றிய கருத்தை வெளியிடும் கருவியாகப் பயன்படு முறையில், ஆழ்ந்த அந்தரங்க மான அறிவை வெளியிடு முறையில், ஆங்கிலத்தைப் பயன்படுத்த முடியாது. ஆங்கில மொழியைத் தெள்ளத் தெளியக் கற்றிருப்பி னும், வங்காளி ஒருவனின் எண்ணத்தையும் உணர்ச்சிகளையும் வெளியிடும் உயிருள்ள கருவியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்த முடியாது. எந்த அரிய அழகும், கினேவும் ஆக்க வேலைகளில் கம்மை ஈடுபடுத்துகின்றனவோ, அவை வேற்றுமொழி மூலம் தம் உண்மை வடிவத்தை அடைய முடிவதில்லை. அல்லாமலும் பரம்பரையாகப் பெற்ற குணங்கள், பல தலைமுறைகளாக நம்முடைய மனத்தை ஒர் அச்சில் வார்த்துவிட்டமையின், அவைகளும் அந்த உண்மை வடிவத்தைப் பிற மொழி மூலம் அடைய முடியாது. நம்முடைய குழந்தைப் பருவமும் இளமைப் பருவமும் எண்ண உள்ளோட்டத்தை விளங்கிக் கொள்ள முடியாத ஒரு மொழியைக் கற்பதிலேயே கழிந்து விடுகின்றன என்று முன்னரே கூறியுள்ளேன். வயது முதிர்ந்தவுடன் இங்கிலே தலைகீழாக மாறி விடுகிறது. அப்பொழுது நம் எண்ணத்தை வெளியிடுவதற்குரிய ஒரு மொழி கிடைக்காமல் திண்டாடுகிருேம். வாழ்க்கையின் முற்பகுதியில் நாடு கற்கும் மொழிக்கும் நமது எண்ணங்கட்கும் தொடர்பில்லாமை யாலேயே ஆங்கில இலக்கியத்தோடு நெருங்கிய தொடர்பு கொள்ள முடிவதில்லை என்பதையும் முன்னரே குறித்துள்ளேன். பிற்காலத்தில் இருந்த அறிவாளிகள் ப்லரும் ஆங்கில இலக்கியத்தில் திருப்தி காணுமற்போனதற்கும் காரணம் இதுவேயாகும். இந்த அறிவாளி களே எடுத்துக் கொண்டால், அவர்களுடைய எண்ணங்கள் ஆங்கிலத்திலிருந்து மட்டுமல்லாமல் வங்காளி மொழியிலிருந்தும் விடுபட்டு நிற்கக் காண்கிருேம். உண்மையைக் கூறுமிடத்து, வங்காளி மொழிக்குக் கூட அவர்கள் அங்கியர்களாக ஆகி, அதனிடம் ஒரு வெறுப்பையும் பழகி விட்டார்கள். அந்த மொழி தங்கட்குத் தெரியாது என்பதை அவர்கள் பிறர் அறியக் கடற மறுக்கிருர்கள். அதற்குப் பதிலாக, சிந்தனைக்குரிய வேலை செய் வதற்கு அம் மொழி ஏற்றதில்லை என்றும், தம் போன்ற நாகரிக முடைய மக்களுக்கு ஏற்றதில்லை என்றும் கடறுகிருர்கள். وی به ! இந்தப் பழம் புளிக்கும்’ என்ற நரியின் கதைதான் இவர்கள் கதையும. - 螯