பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சமுதாயமும் அரசாங்கமும் நம்முடைய நாட்டைப் பொறுத்தவரை, போர் புரிதல், காட் டைக் காத்தல், நீதி வழங்கல் என்பவை மட்டுமே அரசனுடைய கடமைகளாக இருந்தன. ஏனைய, குடிநீர் வ்ழங்கல் முதல் அறிவு வழங்கல் வரை அனைத்தும் சமுதாயத்தின் பொறுப்பிலேயே இருந்து வந்தன. இவற்றை மிகச் சிறந்த முறையில் செய்து வந்தமையின், பல நூற்ருண்டுகளாக மாறி மாறிப் புதிய அரசர்கள் வந்தபோதிலும், நம்முடைய ஆன்மீக வாழ்க்கையை அழித்து, நம்மைக் காட்டு மிராண்டிகளாக மாற்ற முடியவில்லை ; நம்முடைய சமுதாயத்தை அழித்து நம்மை அநாதைகளாக ஆக்கவுமில்லை. அரசர்களிடையே ஓயாமல் போர்கள் நிகழ்ந்து வந்தன. என்ருலும், மூங்கில் தோப்பின் இடை வெளிகளிலும், மாந்தோப் பின் இடையேயும் கோயில்களையும், தங்குமிடங்களையும் கட்டிக் குளங்களையும் தோண்டி வந்தோம். கிராமப். பள்ளி ஆசிரியர் எளிய கணக்குகளைப் போதித்து வந்தார். வேத நூல்களிலிருந்து படிப்பதும், கோயில் வாயில்களில் இராமாயணம் படிப்பதும் ஒய்ந்ததே இல்லை. கிருஷ்ண பக்தியைப் பரப்பும் இசைப் பாடல்கள் கிராமச் சாவடிகளில் மிகுதியும் ஒலித்தன. நம்முடைய கிராம சமுதாயங்கள் புறத்திலிருந்து கிடைக்கும் உதவியை என்றும் நாடியதே இல்லை ; புறத்திலிருந்து வந்த அதிகார ஆதிக்கம் அதனு டைய கட்டுக்கோப்பைக் கலைத்ததுமில்லை. - நம்முடைய காட்டில் இன்று ஏற்பட்டுள்ள தண்ணிர்ப் பஞ்சத் தைப் பற்றி நாம் கவலைப் படுவது, ஏனேய கவலைகளோடு ஒப்பு. நோக்கிப் பார்த்தால் மிகச் சாதாரணமானதாகவே படும். பஞ்சத் தின் முக்கியமான காரணத்தைக் கண்டுதான் நாம் மிகவும் வருந்து கிருேம். இந்தச் சமுதா: தன் மேலேயே நம்பிக்கையை இழந்து விட்டு அதனுடைய கவனம் முழுவதையும் புறத்தே செலுத்து வதைக் காணும்பொழுதுதான், அக்த முக்கிய காரணத்தை அறிந்து, காம் வருத்தம் அடைகின்ருேம், ஒரு கிராமத்தை அடுத்துப் பல காலமாக ஓடிக் கொண்டிருந்த ஆறு, திசை மாறிப் போனல், கிராமத் தண்ணிர் வழங்கல், பயிர் கிலமை, வாணிகம் ஆகியவை அழிவுறுகின்றன. சோலேவனங்கள் பாலைவனங்களாக மாறுகின்றன ; முன்னர்ச் செல்வங் கொழித்த இடத்தில் தழைத்து கிழல் தந்த ஆல மரமும் அசோக மரமும் களை