பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அனைத்துலக மனிதனை நோக்கி நாட்டில் ஒரு வலிமையான சிந்தனையை உண்டாக்க வேண்டு மால்ை, நாம் எவ்வாறு தொடங்கவேண்டும் என்பது பற்றி ஆராயு வேண்டும். ஆங்கில முறைப்படி ஒரு கடட்டிங் கூட்டுவதற்குப் பதிலாக, இந்திய முறையில் ஒரு விழாவைக் கூட்டவேண்டும். நாட்டுப்பாடல், கிராமிய நாடகம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு திருவிழா நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்களேக் கவர்ந்திழுக் கும். இவ் விழாவில் சிறந்த பாடகர்கள், நாடகக் குழுவினர், பேச் சாளர் ஆகியவர்கட்குப் பரிசு வழங்கவேண்டும். நாட்டின் விஜன் பொருள்களைக் கண்காட்சியாக வைப்பதுடன் சுகாதார விதிகளே ஒளிப்படங்கள் முதலியவற்றின் உதவியுடன் விளக்கவேண்டும். எல்லாவற்றையும்விடத் தேசீயத் தேவைகள் பற்றி நாம் கூற வேண்டிய அனைத்தையும் எளிய முறையில் வங்காளி மொழியில் அறிவால் உயர்ந்து, அடக்கத்தால் மேம்பட்டவர்கள் எடுத்துக் கூற வேண்டும். நம் மக்களில் அதிகப்படியானவர்கள் கிராமங்களில்தான் வசிக்கிருர்கள். வெளி உலகத்தின் உயிர்த் துடிப்பு கிராமங்களில் பரவவேண்டுமானல், விழர்க்கள்தாம் சிறந்த வழி. இந்த விழாக்கள் மூலம் வெளியுலகத்தை நம் வீட்டிற்குள் கொணர முடியும். இத்தகைய விழாக்களில் கிராமங்கள் குறுகிய பழமை பாராட்டும் இயல்பை மறக்க முடியும். ஏனென்ருல், இத்தகைய சந்தர்ப்பங்கள் கொடுக்கவும் வாங்கவும் வாய்ப்பளிக் கும். மழைக் காலத்தில் ஆகாயத்திலிருந்து பெய்கின்ற மழையால் குளங்கள் நிரம்புவது போல, விழாக்காலத்தில் கிராம மக்களின் மனம், வெளியுலக எண்ணங்களால் நிரம்புகிறது. இந்த விழாக்கள் நம் நாட்டிற்கு இயல்பாய் அமைந்தவை. சாதாரணமான ஒரு கடிட்டத்திற்கு நம் மக்களே அழைத்தால், அவர் கள் சந்தேகம முதலியவற்றுடன் வருவதால், தம் மனத்தை உடன் திறப்பதில்லை. ஆளுல், விழாக்களில் கூடுகின்றவர்கள் தம் உள்ளங் களைத் திறந்துவிட்டு வருகின்றனர். கலப்பையையும், அரிவாளேயும் மறந்து, விடுமுறைநாள் மனங்லேயில் அவர்கள் வருகின்றனர். அந்த நேரந்தான் அவர்கள் அருகே அமர ஏற்ற நேரம்; அந்த நேரங்தான் காட்டின் உயிர் கிலேயைத் தொடக்கூடிய நேரம். வங்காளம் முழுவதிலும் ஆண்டு பூராவும் விழாக்கள் கடை பெறுகின்றன. இவற்றை ஒரு பட்டியல் எடுக்கவேண்டும். இந்த