பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயமும் அரசாங்கமும் 57 விழா என்னும் திறந்த வாசல் வழியேதான் நம் காட்டு மக்களே அறிந்துகொள்ள முடியும். கற்றறிவுடைய்வர்கள் அவர்கள் பிராந்தியங்களில் fᏋ ᎦᏡy L_. பெறும் விழாக்களில் ஒரு புத்துணர்ச்சியையும், ஒரு புதிய இலட் சியத்தையும் ஊட்ட முன வருவார்களேயானுல், ஹிந்து முஸ்லீம் என்ற இருவரையும் இவ்விழாக்கள் மூலம் ஒன்ருக்க முன்வருவார் களேயானல், நாடு முழுவதும் புத்துயிர்பெற்று இயங்கும். இவ்விடங் களில் பொருளற்ற அரசியல் வாதத்தை விட்டுவிட்டு, மக்களின் உண்மைத் தேவையான, பள்ளிகள், சாலைகள், நீர்த்தேக்கங்கள், புல் தரைகள் என்பவை போன்றவற்றைப் பற்றிப் பேசில்ை உண்மையிலேயே புத்துணர்ச்சி ஏற்படும். உழைப்பை நல்க விரும்பும் ஒரு குழுவினர் வங்காளத்தின் மாவட்டங்களில் சுற்றித் திரிந்து பாட்டுகள், ஒப்பித்தல், ஒளிப்படம் காட்டுதல் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதானுல், செலவைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. கிலச் சொந்தக்காரருக்கு ஒரு பகுதி யைச் செலுத்திவிட்டாற்கட்ட அவர்கட்கு பண இலாபம் ஓரளவு மிஞ்சும். தேசீயப் பணியில் இதல்ை ஏற்படும் இலாபத்தைக் கணக்கிட்டால், இந்தத் தொண்டர்கட்கும் பொது மக்களுக்கும் இடையே வலுவான நட்பை உண்டாக்கிவிடலாம். இந்த முறையில் செய்யப்படும் தொண்டிற்கு ஓர் அளவே இல்லை. கம்முடைய மக்கள் மிகப் பழங்காலத்திலிருந்தே விழாக்கள் ஏற்படுத்தி அவற் றின் மூலந்தான் இலக்கியத்தை அனுபவித்தும், சமய உணர்ச்சி யைப் பெருக்கியும் வந்துள்ளனர். - சமீப காலமாக நம்முடைய கிலக்கிழார்கள் ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டுக் கிராமங்களே விட்டுவிட்டு நகரங்கட்கு நகர்ந்து விட்டார்கள். அவர்களுடைய பிள்ளைகட்கும், பெண்கட்கும் திருமணம் கடத்துகையில் செய்யப்படும் இசைக் கச்சேரிகள், களி யாட்டங்கள், பொழுதுபோக்குகள் ஆகியவை அனேத்தும் அவர் களுடைய பணக்கார நகர நண்பர்கட்கே பயன்படுகின்றன. அதே நேரத்தில் அவர்களுடைய வறுமை நிறைந்த ரயத்துக்கள் இந்த விழாக்கட்காகச் செலுத்தும் அதிகத் தொகையை மட்டும் தங்கள் பங்கில் பெறுகிருர்கள். விருந்துக்குரிய இனிப்புப் பண்டங்களைத் தயாரிக்கும் ஏழைகள் அதில் ஒரு வாய் உண்ணவும் முடியாது. எனவே, வங்காள கிராமங்களில் மகிழ்ச்சி என்பது வறண்டு விடு கிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட சிறப்பாக