பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அனைத்துலக மனிதனை நோக்கி அமைக்கப்படும் இலக்கிய விழாக்கள், ஒரு காலத்தில் ஆண், பெண், குழந்தைகள் ஆகிய அனைவருக்கும் மகிழ்ச்சி யூட்டியது போக, இன்று பொது மக்களின் பிடிக்கு அப்புாற்போய்க் கொண் டிருக்கின்றன. நாம் வகுத்துள்ள விழாத் திட்டம் கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டின் வாயிலுக்கும் இலக்கியத்தையும் மகிழ்ச்சியை யும் கொண்டு செல்லக் கூடுமாயின் அப்பொழுது, இந்தப் பயனுள்ள காட்டின் இருதயம், கொஞ்சங் கொஞ்சமாக வறண்டு போகும் கிலே தவிர்க்கப்படும். ஒரு காலத்தில் நமக்குக் குடி நீரையும், நல்ல சுகாதாரத்தையும் தந்த நீர் நிலைகள் இன்று அழுக்காக்கப்படுகின்றன. தண்ணிர்ப் பஞ்சத்தை உண்டாக்குவதோடல்லாமல், அவை, இன்று நோயை யும், மரணத்தையும் பரப்புகின்றன. அதேபோல, இன்று நாட்டில் நடைபெறுகின்ற விழாக்கள் அனைத்தும் பொதுமக்கள் கல்வி அறி வைப் பரப்பாமல், ஊழலுக்கு கிலைக்களமாக ஆகிவிட்டன. இந்த அழுகிவரும் அவல நிலையைத் தடுக்க நாம் முயலவில்லையாளுல் குற்றமும் அவமானமும் நம்மை மூடி மறைத்துவிடும். - IIÍ ஒரு மனிதனுக்கும் மற்ருெரு மனிதனுக்குமிடையே மனித உறவை ஏற்படுத்துவதே இந்தியாவின் இடைவிடா நோக்கமாக இருந்து வந்தது. மிக நீண்ட தூரத்திலுள்ள உறவினர்களுடன் கூடத் தொடர்பு வைத்திருக்க வேண்டியுள்ளது. பிள்ளைகள் தக்க வயது அடைந்த பிறகுங்கட்டத் தாய் தகப்பன்மார்களுடைய தொடர்பு தளர்வதில்லை. கிராமங்களில் சாதி, சூழ்நிலை என்பவற் றைக் கடந்து நம் அயல் வீட்டாரிடமும் பிறரிடமும் உறவு முறை கொள்கிருேம். ஆசிரியர், பூசாரி, விருந்தினர், துறவிகள், கிலக் கிழார், குத்தகைதாரர் ஆகியவர்களிடமும் உறவு முறை ஏற்படு - கிறது. இந்த உறவு முறை சாத்திரத்தில் விதிக்கப்படவில்லை எனினும், இருதிய பூர்வமாக்ச் செய்யப்படுவதாகும். ஒருவர் தந்தை யைப் போலவும், சிலர் மக்கள் போலவும், சிலர் சோதரர் போலவும், இன்னுஞ் சிலர் நண்பர்கள் போலவும் ஆகின்றனர். ஒருவரைச் சந் திக்கும்பொழுதே அவரிடம் உறவு கொண்டாடிவிடுகிருேம். ஒரு மனிதனே இயந்திரமாகக் காணும் பழக்கமோ, அல்லது கம்முடைய காரியத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும் கருவியாக கினைக்கும் பழக்கமோ நம்மிடம் இன்னும் வரவில்லை. இப் பழக்கத்திற்கு நன்மை தீமை என்ற இரண்டும் இருக்கலாம். எவ்வாருயினும், இதுவே கம்