பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயமும் அரசாங்கமும் 59 நாட்டின் பழக்கமாகவும், இன்னும் கூறப்போல்ை கீழை நாட்டுப் பழக்கமாகவும் இருந்து வருகிறது. நமது இயல்பு இவ்வாறு அமைந்திருக்கிறது. ஒருவரிடம் அன்பு பூண்டு உறவு கொண்டாடிய பின்னரே அவரிடம் பயன் கருதிய உறவை மேற்கொள்கிருேம். இதன் பயனகத்தான் போலும், அதி கப்படியான பொறுப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தேவை பற்றி ஏற்படுகின்ற உறவு குறுகியதாய், அலுவலகத்தில் தொடங்கி அங்கேயே முடிந்து விடுகிறது. தலைவனுக்கும் ஏவலாளனுக்கும் வேறு தொடர்பு இல்லையானுல் வேலை முடிந்து கடலி வாங்கியவுடன் அவர்கள் தொடர்பு முடிந்து விடுகிறது. ஆனல், ஒரு மனிதப் பிணைப்பை உணரத் தொடங்கியவுடன் மற்றவருடைய சொந்த மகிழ்ச்சி,துயரம் ஆகியவை பற்றியும் நம் கருத்துச் செல்கிறது. வேலைக்காரனுடைய மகன், மகள், திருமணம் என்பவற்றுடன் இழவிலும்கூடப் பங்கு கொள்ள முடிகிறது. - சமீபத்தில் கிகழ்ந்த ஓர் உதாரணத்தை இங்கே காணலாம். ராஜஸ்காயிலும், டாக்காவிலும் நடைபெற்ற மாகாண மாநாட்டில் கலந்துகொண்டேன். இம் மாநாடுகளை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்கிருேம் என்பதைச் சொல்லத் தேவை இல்லை. ஆனல், வேலை செய்வதில் காட்டப்பட்ட சுறுசுறுப்பைக் காட்டிலும், உபசாரம் செய்யும் சடங்குதான், மிக முக்கியமானதாக இருந்ததும், எனக்கு வியப்பை விளேத்ததுமாகும். கல்யாணப் பெண்ணின் வீட்டுக் காரரைப்போல், தேவைப்பட்ட உணவு, கேளிக்கை, வசதிகள், இன்பம் ஆகியவை மிகமிக அளவு மீறி இருந்ததால், விருந்து உப சரிக்கும்.பொறுப்புடையவர்கள் மிகவும் அல்லலுற்றிருப்பார்கள். அவர்களாகப் பார்த்து நீங்கள் உங்கள் காட்டிற்குத் தொண்டு புரிய இங்குக் கூடி இருக்கிறீர்களே தவிர, எங்கள் விருப் ப்த்தைத் தட்டாமல் இருப்பதற் கன்று. இவ்வளவு அதிகப்படியான நல்ல உணவையும் மது கிங்கலான குடிக்கும் பொருள்களையும், தங்க வசதிகளையும், போக்குவரத்து சாதனங்களையும் காங்கள் ஏன் தாவேண்டும்?' என்று கேட்டிருந்தால் அதில் தவறு ஒன்றுமில்லை. கடமை என்ற பெயரில் இவ்வாறு செய்கின்ற நிலை நம்முடைய இயல்பிலேயே இல்லை. கடமைகளைக் கூட ஒரு தனிப்பட்ட உறவு முறையில் வைப்பது நமது மரபு. ஆகவே, மாநாட்டில், நடைபெற்ற நிகழ்ச்சிகளைவிட, கிடைத்த உபசரிப்பே நம்மைப் பெரிதுங் கவர்க் தது. மேனுட்டுப் பாணியில் அந்த மாநாடுகள் கடைபெற்ருலும், இந்திய இருதயத்தை வெட்டிவி, முடியவில்லை. நம்முடைய தேசிய - 5 . .