பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயமும் அரசாங்கமும் . . . . . 6.3 நாட்டில் மிகச் சாதாரணமான ஒரு காரணத்திற்காகக்கூட ஹிந்துக் களுக்கும் முஸ்லீம்களுக்கு மிடையே பூசல் தோன்றி விடுகிறது. இத்தகைய பூசல்கள் நேரும்பொழுது உடனே அவற்றைத் தீர்த்து வைக்கவும், மாறுபட்ட கருத்துக்களேச் சந்து செய்வித்து அமைதி யையும் நல்லெண்ணத்தையும் விஸ்தரிக்கவும், சமுதாயத்தில் ஓர் உறுப்புக்கு அதிகாரம் அளித்தாலொழிய இச் சமுதாயம் ஒற்றுமை இன்மையால் காளாவட்டத்தில் வலியிழந்து போகும். உங்களுடைய சொந்த வலிமையில் நம்பிக்கை இழந்துவிடா .” தீர்கள். எதிர்பார்த்த காலம் உறுதியாக வந்துவிட்ட தென்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்தியாவில், என்றுமே ஓர் ஒற்றுமைப் படுத்தும் சக்தி பணிபுரிந்து வருகிற தென்பதையும் உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள். மிகவும் இக்கட்டான சந்தர்ப்பங்களிற் .இந்தியா நடைமுறையில், அதைக் கடந்து வந்துள்ளது وصاية . அதனுல்தான், இந்தியா இன்னும் உயிரோ டிருந்துவருகிறது. இந்த இந்தியாவில்தான் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். இன்றுங் கூட, இந்த இந்தியா, பழைய மரபையும் புதிய காலத்தையும் இணக்கும் வகையில் வழி செய்து வருகிறது. நாம் ஒவ்வொருவரும் மனச்சான்றுடன் நம்மால் முடிந்த அளவு கம் பங்கைச் செய்வோ மாக. கலக மனப்பான்மையோ அன்றி வெறும் அறியாமையோ காரணமாகக் கூட்டுறவுக்கு எதிரான முறையில், எந்த நிலையிலும், ஒத்துழைக்காமல் இருந்துவிடக் கூடாது. ஹிந்து சமுதாயத்திற்கும் வெளி உலகிற்கும் இடையே உள்ள முரண்பாடு ஒன்றும் புதியதன்று. ஆரியர்கள் . இந்தியாவிற்குள் நுழைந்தவுடன், உள்நாட்டில் வாழ்ந்தவர்களுடன் கடும்போர் புரிக் தனர். இந்தப் போரில் ஆரியர்கள் வெற்றி பெற்ருலும், உள் நாட்டில் வாழ்ந்தவர்களே ஆஸ்திரேலியாவிலும், அமெரிக்காவிலும் செய்ததுபோல அழித்து ஒழித்துவிட வில்லை. ஆரியக் குடிஇருப்புக் களிலிருந்து உள்நாட்டுக்காரர்களே வெருட்டிவிட வில்லை. பழக்க வழக்கங்கள், மரபுகள் ஆகியவற்றில் இந்த இருவருக்கும் இடையே கடல்போன்ற வேற்றுமை இருந்துங்கட, சமுதாயக் கூட்ட மைப்பில் அவர்கட்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தந்தனர் ஆரியர். இதன் பயனுக ஆரிய சமுதாயம் பலகிறக் கலவை யுடையதாய் ஆகிவிட்டது. பிற்காலத்தில், மறுபடியும், இச் சமுதாயம் தன் பழைய கொள்கைகளே உதறிவிட நேர்ந்தது. புத்த சமய காலத்தில் பல