பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 அனைத்துலக மனிதனை நோக்கி சமுதாயம் தன்னுடைய பழமை பாராட்டும் இயல்பாகிய வலையில் அகப்பட்டு, வளர்ச்சி இன்றி உயிரொடு சாகும் நிலையைப் பெற்று விடும். புத்த காலத்தை அடுத்து வந்த ஹிந்து சமுதாயம் புறத்தே இருந்து வருகிற ஆக்கிரமிப்பைக் காத்துக் கொள்ளவும், எஞ்சி .யுள்ள தன் கொள்கைகளைக் காப்பாற்றிக் கொள்ளவும் விரும்பிப் பல தடைச் சுவர்களே எழுப்பியது. அதன் பயனுக, அந்தச் சமுதாயம் இந்தியாவில் ஒரு புகழ் வாய்ந்த இடத்தைப் பெற முடியா மற் போய்விட்டது. - - VI ஒரு காலத்தில் உலகத்தின் உச்சியில் இந்தியா இடம் பெற் றிருந்தது. சமயம், தத்துவ சாத்திரம், விஞ்ஞானம் ஆகிய துறை க்ளில் இந்தியா ஆன்மீக முன்னேற்றங் காண முற்பட்டமைக்கு ஒர் எல்லையே இல்லை. அதன் பயனுக இந்தியாவின் வலிமை மிக விரிந்து சென்று புதிய இடங்களையும் தன்னுள் அடக்கி இருந்தது. இம்முறையில் பிற இடங்களே வென்று ஆட்சியாளர் இடத்தில் அமர்ந் திருந்த இந்தியா, இன்று அதனை இழந்து விட்டது. இன்று ஆசிரிய கிலே நீங்கி மாணக்க நிலையில் நிற்கின்றது. இந்தியாவின் ஆன் மாவில் அச்சம் புகுந்து விட்டதுதான் இதற்குரிய காரணம். பேரச்சமே நாம் கடல் கடந்து செல்வதைத் தடை செய்தது; அறிவுக் கடலைக் கடப்பதையுங்கடடத் தடை செய்தது. அகில உலகத்துக்கும் உரிமையுடையவர்களா யிருந்த நாம் இன்று ஒரு சிற்றுாருக்கு உரிமையுடையவர்களாகி விட்டோம். சமுதாயத்தில் உள்ள அச்சம் கிறைந்ததும் பொருளைச் சேர்த்துக் காப்பாற்றுவது மான பெண் தன்மை, நம்முடைய ஆண்மையை அடக்கிவிட்டது. அறிவுத் துறையிற்கட்ட நாம் மரபுக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர் களாக, ஆண்மை யிழந்து கிற்கிருேம். அறிவுத்துறையில் இந்தியா எந்த அளவுக்கு வாணிகம் நடத்தி இருப்பினும், அந்த வாணிகம் நாளுக்கு நாள் வளர்ச்சி யடைந்து உலகைச் செழிக்கச் செய்தது போக, இன்று அதே வாணிகம் மகளிரின் அறைகளில் பொன் பெட்டிகளில் கிடந்து உறங்குகிறது. அது, அங்குப் பாதுகாவ லுடன் இருக்கலாம் ; ஆணுல், அது வளர்ச்சியடையாது; எந்த அளவுக்கு கஷ்டம் ஏற்பட்டாலும் அதனே ஈடு செய்யவே முடியாது. ஆசிரியர் என்ற மதிப்பை இழந்து விட்டோம். அரச கிலே என்றுமே நம் நாட்டில் பெரிதாகக் கருதப்பட்டதில்லை; எனவே,