பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii தையும், சிறந்த மொழிபெயர்ப்பாளர்களையும், இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில், இப் பணியை மேற் கொள்ளுமாறு கழகத்தினரால் கேட்டுக் கொள்ளப்பட்ட அறிஞர்கள் அனைவரை யுமே சாரும். - இந்த வெளியீடு, எதிர்பார்க்கப்படும் அளவு கீழ், மேல் நாடு களில் பரவுமேயானல், இதன் மூலம் கிடைக்கின்ற, உரிமைத் தொகை, இன்று மலர்ந்து வரும் இந்தியாவின் பழம் பெரும் தலைவர் களுள் ஒருவராகிய தாகரின் நூல்களை இக் கழகம் மேற்கொண்டும் வெளியிட ஏதுவாகும். . . - - இப் புதிய பாரதத்திற்குப் பல செய்திகளே கூறியுள்ளார் தாகடர். கல்வி, சாதி; கிராம முன்னேற்றம், தன்னம்பிக்கை, சுய உழைப்பு, மரபைக் காத்தல், கீழ், மேல் நாடுகளின் பண்பாடுகள் கலப்பதால் விளையும் பயன், மகளிரின் நிலை, சமுதாய நடைமுறை, சுய ஆட்சி ஆகிய பிரச்னைகள் பற்றி இன்றைய இந்தியா முடிவுகாண முயன்று வருகிறது. முடிவு கண்டு தீர வேண்டிய இந்தப் பிரச்னைகள் பற்றித் தாகூர் தம் கருத்தைப் பேசியுள்ளார். இப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயலும் இந்தியா தன்னிடத்தில் தோன்றிய பெரு மக்களின் உள்ளுணர்வு, தெளிந்த அறிவு, வழிகாட்டும் சக்தி ஆகியவற்றி லிருந்து நிரம்ப எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பெரு மக்களில் வங்காளி ஆசிரியரும் சீர்திருத்தவாதியும் ஆகிய தாகடரும் ஒருவர். -டக்ளஸ் என்ஸ்மன்ஞர்.