பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயமும் அரசாங்கமும் '69 VII பலவற்றுள் ஒன்றைக் காண்பது, அதாவது வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் ஆழமான கொள்கையாகும். கருத்து வேறுபாடுகளே முரண்பாடாக இந்தியா கருதுவதில்லை. அதேபோல அங்கியர் எவரையும் பகைவர்களாகக் கருதிக் காண் பதுமில்லை. எனவே, யாரையும் ஒதுக்குவதுமில்ஃப் அழிப்பது மில்லை. அதற்குப் பதிலாக ஒரு பரந்த சமுதாய அமைப்பில் அனை வருக்கும் ஒவ்வோர் இடத்தைக் காண முற்படுகிறது. எல்லா வழி களிலும் உண்மை உண்டு என்பதை ஒப்புக் கொள்வதுடன், பெருமையை எங்கே கண்டாலும் அதற்குரிய மரியாதையைச் செலுத்துகிறது. ஒற்றுமைப் படுத்தும் இந்தப் பெரிய சக்தி இந்தியாவிடம் இருப் பதால் கனவில் கண்ட பகைவர்களைப் பற்றி நாம் அஞ்ச வேண்டிய தில்லை. ஒவ்வொரு போராட்டத்தின் முடிவான பயனுகவும், நம்முடைய வளர்ச்சியை நாம் எதிர்பார்க்கலாம். ஹிந்துக்களும், பெளத்தர்களும், முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் இந்திய மண்ண்னில் போர் புரிந்து சாக வேண்டியதில்லை; அதற்குப் பதிலாக, அவர்கள் இங்கே ஒன்றல் தன்மையைக் காணலாம். அந்த ஒன்றல் தன்மை ஹிந்து அல்லாததாக இராது. அதற்குப் பதிலாகப் புதுமை யான ஹிந்துத் தன்மையுடையதாக இருக்கும். பல்வேறு உறுப்புக் களும் எவ்வளவு சர்வதேசாபிமானியாக (cosmopolitan) இருப் பினும், இருதயம் இந்தியாவின் இருதயமாகவே இருக்கும். இந்தத் தெய்வக் கட்டளையை மனத்தில் பதிய வைத்துக் கொண்டால், நாம் எடுத்த காரியத்தில் வலுவாக நிற்க முடியும்; நம்முடைய அவமானம் கரைந்து விடும்; இந்தியாவின் மரணமில் லாத உண்மையான வலிமையை நாம் காண முடியும். வெறும் மாணவர்களாகவே இருந்து ஐரோப்பியக் கல்வியைப் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டியதில்லை என்பதை மனத்தில் பதித்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் அறிவுத் தெய்வமாகிய கலைமகள் ~ . எல்லாக் கலைகளையும், விஞ்ஞானத்தையும் நூறு இதழ்த் தாமரை போல கம்மிடையே ت. نت فني بيرن من بن .*. —1904. வாழ்வின் பருமையில் செல்வச் சுமைதான் உண்டு ஆனுல் வாழ்வின் முழுத்தன்மையில் சுகவாழ்வுண்டு. -ரவீந்திரநாத் தர்கடர்.