பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அனைத்துலக மனிதன் நோக்கி டங்கள், கிளர்ச்சியை ஊட்டுவனவாகவும், பல்வேறு வகைப்பட்டன . வாகவும் அமையவேண்டும்; மேலும், இளைஞருடைய மனங்களில் வெறுப் புணர்ச்சியையும், பகைமை யுணர்ச்சியையும் தோற்றுவிக் - காமல் இருக்கவேண்டும். அவ்வாறில்லாமல் பிள்ளைகளைப் பொறுத்த மட்டில், பள்ளிக்கட்டத்தில் இருக்கும் ஒரு சில மணி நேரங்களுக்கு மட்டும் பயன்படக் கூடியனவாய் இருப்பதில் பயனில்லை. பள்ளிக்கட்டங்களே வீடுகளாக மாற்றத் தொடங்கினல், அவை விடுதிகளோடு கூடிய பள்ளிக்கூடங்களாக மாறுமே தவிர வேறு பயன் ஒன்றுமில்லை. விடுதிப் பள்ளிக்ககூடங்கள் திருப்தி யளிக்காத ஓர் இனத்தைச் சேர்ந்தவை. அவை போர் வீரார் தங்கும் பாடி வீடு களையும், பைத்தியக்காரர் மருத்துவ மனைகளேயும், சிறைகளையுமே ஒத்துள்ளன. ஐரோப்பிய முறையில் பள்ளிக்ககூடங்களே அமைக்க வேண்டு மென்பதை நாம் அறவே மறந்துவிட வேண்டும். ஏனென்ருல், ஐரோப்பிய வரலாறும், ஐரோப்பிய சமுதாயமும் நம்முடைய வர லாற்றுக்கும் சமுதாயத்திற்கும் முற்றிலும் மாறுபட்டவை. எந்தக் கருத்துக்களும், குறிக்கோள்களும் பழங்காலத்தில் நம்முடைய காட்டில் முக்கியத்துவம் பெற்றனவோ, அவற்றை நல்ல முறையில் நாம் தெரிந்துகொள்ள முற்பட வேண்டும். இதில் பல சங்கடங்கள் உள்ளன. இதுவரை ஆங்கிலக் கல்வியைப் பெற்றுவந்த காரணத்தினுல், அந்தக் கல்வி முறை கம்முடைய கருத்தையும் எண்ணத்தையும் கவர்ந்து, நம்முடைய நாட்டின் சாதனைகளை நாம் அறிய முடியாமல் செய்துவிட்டது. ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெறவேண்டுமென்று நாம் செய்கின்ற போரட்டத்தில்கட்ட ஆங்கிலேய அரசியல் முறைகளைக் கைவிட்டுவிட நாம் தயாராக இல்லை. இதில் முக்கியமான கஷ்டம் எங்கே கேருகிறது என்ருல், இங்கிலாந்தைப் பற்றி நன்கு தெரியாமையினுல் ஆங்கிலக் கல்வியைப் பற்றியும் சரியான முறையில் நாம் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆங்கிலக் கல்வி அதற்குரிய ஆங்கிலச் சமுதாயத் தோடு எங்ங்னம் தொடர்பு கொண்டுள்ளது என்பதை அறியாத காரணத்தினுல் இந்திய வாழ்க்கையோடு ஆங்கிலக் கல்வியை எங்கனம் பொருத்த முடியும் என்பதை அறிய முடியாமல் அவதிப் படுகின்ருேம். என்ருலும், இதுதான் மிகமிக முக்கியமான பிரச்னை யாகும். இதை விட்டுவிட்டு ஆங்கில நாட்டுப் பள்ளிக்கடபங்களில்