பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 அனைத்துலக மனிதனை நோக்கி விரிப்பதையும் குழந்தைகள் காணட்டும். வருஷத்தில் ஏற்படுகின்ற 6 பருவங்களாகிய 6 அங்க சங்கீதக் காட்சியைக் குழந்தைகள் கண்டு அனுபவிக்கட்டும். மழை பொழிவதற்கு முன்னர், கருத்த மேகக் கூட்டங்கள் இடியையும் பிறப்பித்து உலகத்தைக் கவிங் திருப்பதையும் அவர்கள் கண்டு அனுபவிக்கட்டும். மழைக்காலம் தீர்ந்தவுடன் மென்காற்றில் அசைகின்ற பச்சையுடன் கூடி, தொடு வானம் வரையில் நீண்டிருக்கின்ற வயல் வெளிகளே அவர்கள் கானட்டும். வளர்ச்சி பெறும் காலத்தில் சுதந்திரம் மிகமிக இன்றியமையா தது. அந்தச் சுதந்திரத்தை இயற்கை மிகுதியாகத் தருகின்றது. ஒரு மாணுக்கன் காலை 9 மணிக்கும் 10 மணிக்குமிடையே அவசர மாகச் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கூடத்திற்கு ஓடி, சந்தேகாஸ்பத மான ஒரு கேடி, ப்ோலீஸ் ஸ்டேஷனில் தினம் சென்று ஆஜர் பட்டியல் தருவதுபோல, பள்ளிக்கட்டத்திற்குச் சென்று ஆஜர் பட்டியல் தர வ்ேண்டிய சூழ்நிலையில் அந்த மாணுக்கன் கல்ல முறையில் வளர்ச்சி யடைய முடியாது என்பது திண்ணம். வலுவான சுவர்களுக்கு நடுவே பெரிய கதவுகளையிட்டு அதற்கு ஒரு காவற்காரனேயும் வைத்து, அதற்குள்ளே குழந்தைகளே அனுப்பி என்ன வழியான முறையில் நாம் கல்வி போதிக்கின்ருேம்? இந்த நிலையில் அல்ஜீப்ரா கணக்குகளையும், வரலாற்றின் தேவைகளேயும் குழந்தை கள் தெரிந்து கொள்ளவில்லை யென்ருல், அவர்களைக் குறை கடற முடியுமா? இதற்காகக் காற்று, வெளிச்சம், சுதந்திரத்தினுல் கிடைக் கும் மகிழ்ச்சி ஆகியவற்றை அவர்களுக்கு இல்லாமல் செய்து அவர்களுக்குரிய கல்வி என்பதையே ஒரு தண்டனையாக ஆக்குவ தன் அடிப்படைக் கருத்துத்தான் என்ன ? குழந்தைகள் அறியாமை யுடையவர்களாக பிறப்பதன் காரணமே படிப்படியாக அவர்கள் அறிவு பெற்று, அதைப் பெறுவதில் ஏற்படுகின்ற மகிழ்ச்சியையும் அடைய வேண்டு மென்பதுதான். கல்வியை மீகிழ்ச்சி தரக்கூடிய செயலாகச் செய்யும் ஆற்றல் க்கு இல்லாமல் போகலாம். ஆணுல், அதற்காகப் பள்ளிக்கட்டங்களச் சிறைச்சாலைகளாக மாற்ற வேண்டிய கொடுமை தேவை யில்ல. குழந்தைகள் சுதந்திரமாக இயற்கையோடு பழகி, அதன்மூலம் கல்வி பெற வேண்டுமென்பது தான் இறைவனுடைய எண்ணம். ஆல்ை, அந்த எண்ணத்தைத் தோற்கடிப்பதன் மூலம் நம்மை நாமே தோற்கடித்துக் கொள்கிருேம். எனவே, கருணையின் பொருட்டாவது இந்தச் சிறைச்சாலேயின் சுவர் களை உடைத் தெறிவோமாக. பிறக்கும்பொழுதே குழந்தைகள்