பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விப் பிரச்ன 79 பண்டிதர்களாகப் பிறக்கவில்லை யென்பதற்காக இந்தச் சிறைத் தண்டனையையும், கடுங்காவல் தண்டனையையும் அவர்களுக்குக் கொடுக்கவேண்டா, - கல்வியைப் பொறுத்தமட்டில், புராதன இந்தியாவின் கொள்கை களை நாம் கடைப்பிடிக்க வேண்டுமென்பதே என்னுடைய கருத் தாகும். ஆசிரியர்களும் மாளுக்கர்களும் இயற்கையின் சூழ்நிலை யில் ஒன்ருக வாழவேண்டும். மாணுக்கர்கள் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்துத் தங்கள் கல்வியை முடிக்கவேண்டும். தொன்று தொட்டு வரும் மனிதப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட, என்றும் மாருத இந்த உண்மைகள், நம்முடைய இன்றையச் சூழ்நிலை எவ்வளவு மாறுபட்ட போதிலும், தங்களுடைய சிறப்பை இழந்துவிட வில்லை. முன்மாதிரியாக அமையக்கூடிய ஒரு பள்ளிக்கூடத்தை நாம் கட்டவேண்டி ஏற்பட்டால், ஜன நெருக்கமுடைய நகரத்திற்கு மிக நீண்ட தூரத்திற்கு அப்பால் அமைதியான சூழ்நிலையில் திறந்த வெளி, வயல்கள், மரங்கள், ஆகியவற்றின் சுற்றுச் சூழலில் அப் பள்ளிக்கடிடத்தை அமைக்கவேண்டும். ஆசிரியர்களும், மாணுக்கர் களும் கல்விக்காகவே தங்களேத் தியாகம் செய்கின்ற ஓர் இடமாக அப் பள்ளிக்ககூடம் அமையவேண்டும். இயலுமானுல், அவர்களுக்கு வேண்டிய உணவைத் தயாரித் துக் கொள்வதற்கேற்ப, விவசாயம் செய்யக்கூடிய ஒரு துண்டு நிலமும் அங்கே அமைவது பொருத்தமுடையதாகும். பாலுக்குத் தேவையான பசுக்கள் அங்கே இருப்பதோடு, அவற்றை மானவர் களே பராமரித்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலையும் இருத்தல் வேண் டும். படிப்பில் ஈடுபடாத நேரங்களில் மாணவர்கள் தோட்டங்களில் உழவும், செடி கொடிகளுக்கு நீர் பாய்ச்சவும், வேலிகள் கட்டவும் முயற்சி செய்யவேண்டும். இந்த முறையில் உடலாலும் மனத் தாலும் அவர்கள் இயற்கைபேடு தொடர்பு கொள்ள முடியும். வசதியான சீதோஷ்ண கிலேகளில் வகுப்புகள் பெரிய மரங் களின் கிழல்களில் அமைக்கப்பட வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களும் மரச் சாலைகளின் நடுவே உலாவப் போகும்பொழுது தங்களுக்குள் கடத்தும் கருத்தரங்குகளின் மூலமாகவே கல்வி போதனையின் ஒரு பகுதி கடத்தப்படவேண்டும். மாலே ஓய்வு நேரங் களில் வானவியல் பற்றிப் படிக்கவும், இசையை வளர்க்கவும், பழைய கதைகளையும் வரலாற்றுக் கதைகளையும் அவர்கள் கேட்கவும் வாய்ப்பளிக்க வேண்டும்,