பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 80. - அனைத்துலக மனிதனை நோக்கி தவறிழைத்த மாணவன் பழைய இந்திய முறையிலேயே அதற் குப் பிராயச்சித்தம் செய்யவேண்டும். தண்டனை என்பது, குற்றம் இழைக்கப்பட்டவன் குற்ற மிழைத்தவனுக்குச் செய்யும் பழி வாங்கும் செயலாகும். ஆனல், பிராயச்சித்தம் என்பது குற்ற மிழைத்தவன் தானே தனக்குத் தந்துகொள்ளும் தண்டனையாகும். பிராயச்சித்தம் என்பது நமக்கு நாமே செய்துகொள்ள வேண்டிய கடமை யென்ப தையும், அந்த ஒரே வழியின் மூலமாகத்தான் நாம் செய்யும் தவறு களே நிவர்த்தி செய்ய முடியும் என்பதையும் வாழ்க்கையில் இளமை யிலேயே நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஒரு மனிதன் மற் ருெரு மனிதனல் தண்டிக்கப்படுவது அவனுக்கு இழைக்கப்படும். மிக இழிவான செயலாகும். இது சம்பந்தமாக மற்ருென்றையும் காணவேண்டும். நம் முடைய மாதிரிப் பள்ளிக்கட்டத்தில் பெஞ்சுகள், நாற்காலி கள், மேஜைகள் ஆகியவற்றுக்கு என்ன தேவையென்று என்னுல் அறிய முடியவில்லை. இவ்வாறு சொல்வதல்ை ஐரோப்பிய வாழ்வின் மேல் கொண்ட வெறுப்புக் காரணமாக இவ்வாறு சொல்கிறேன் என்று யாரும் நினைக்க வேண்டா. இவ்வாறு சொல்லும்பொழுது, தேவையில்லாத எல்லாப் பொருள்களையும் ஒதுக்கிவிட வேண்டு மென்ற கொள்கையின் அடிப்படையில் கின்று சொல்கிறேன். நம்முடைய பள்ளிக்கூடங்களில் இக் கொள்கையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டு மென்பதும் என்னுடைய விருப்பம். மேஜை கள், நாற்காலிகள், பெஞ்சுகள் ஆகியவற்றை நாம் அனைவருமே பெறுதல் பொருளாதார அடிப்படையில் இயலாத காரியம். ஆனல், அனைவரும் அணுகுவதற்குப் பூமி என்றுமே இடம் தருகின்றது. நாற்காலிகளும், பெஞ்சுகளும் மண்ணுேடு நமக்குள்ள உறவை அழித்து விடுகின்றன. நம்முடைய தேசம் குளிர்ச்சி பொருந்திய நாடன்று. அன்றியும், நம்முடைய உடைகளும் பூமியின்மேல் உட்காருவதற்குப் பொருந்தாதவை அல்ல. என்ருலும், பிற நாட்டு வழக்கங்களே அப்படியே காப்பி’யடிப்பதற்கு மு.பற்சி செய்கின்ற காம், நமக்கு முற்றிலும் தேவையில்லாத தட்டுமுடிடுச் சாமான்களைச் செய்வதில் ஈடுபடுகின் ருேம். உண்மையில் பயன் படாத சாமான்களை எவ்வளவுக் கெவ்வளவு இன்றியமையாதவை என்று நினைக்கின்ருேமோ, அவ்வளவுக் கவ்வளவு நம்முடைய சக் தியை வீணடிக்கின்றவர்களாக ஆவோம். பொருளாதார வசதியுடைய ஐரோப்பாவைப்போல நம்முடைய கரட்டிற்கு நிதி ஆதாரமில்லை. அன்றியும், ஐரோப்பியர்களுக்கு மலி