பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அனைத்துலக மனிதனை நோக்கி போன்ற சாமான்களை வைத்திருந்தார்கள். வறுமையை அணிகல மாகக் கொண்டிருந்த அவர்கள், காட்டிற்குத் தேவையான் அமைதியை, போதுமென்ற மனத்தை வழங்கினர்கள். இளேயவர் களாக நாம் இருக்கும்பொழுது எளிய வாழ்க்கை வாழ்வதனுடைய தத்துவத்தை மனத்தில் வாங்கிக் கொள்ளக் கூடுமேயானுல், இயந்திரம் இல்லாவிட்டாலும் ஒரு சில சக்திகளேயாவது பெற முடியும். தரையில் உட்காருதல், எளிய உடை அணிதல், எளிய உணவை உட்கொள்ளுதல், குறைந்த அளவு முயற்சியில் சிறந்த பயனைப் பெறுதல் ஆகிய சக்திகள் அவற்றின் பாற்படும். இவற் றைச் சாதாரண சக்திகள் என்று நினைக்கக்கூடாது. இவற்றைப் பெறுவதற்குக்கட்டப் பெருமுயற்சி செய்யவேண்டி வரும். எளிமை, இயற்கையான தன்மை ஆகியவை நாகரிகத்தின் சின்னங்களாகும். ஆடம்பர மிகுதி முதலியவை காட்டுமிராண்டித் தனத்தின் அடிப்படையாகும். உண்மையான பெருந்தன்மை அதனுடைய இயற்கையான சூழ்நிலையில் ஒளிவிட்டுப் பிரகாசிக்குமே தவிர எளிய சூழ்நிலையில் அது எதனையும் இழப்பதில்லை. இது தான் அடிப்படையான உண்மை. நம்முடைய பிள்ளைகள் இந்த உண்மையை உணர்ந்துகொள்ள இதனே ஆணித்தரமாக அவர்கள் மனத்தில் பதிக்க, எல்லாவிதமான முயற்சிகளேயும் செய்ய வேண்டும். பயன்படாத கல்லொழுக்க போதனையின் மூலம் இதனை அவர்களுக்குக் கற்பித்துப் பயனில்லை. அவர்களுடைய பள்ளிக் கடிடங்களிலும், அவர்கள் பார்க்கும் இடங்களிலும் எளிய வாழ்க்கை 'யைக் கடைப்பிடிப்பதன் மூலம் இதனை அவர்கள் மனத்தில் பதிக்க வேண்டும். இதனே அவர்கள் கற்றுக்கொள்ளாவிட்டால், التي اسكة ழைப்பைக் கேவலமானதாகக் கருதித் தரையில் உட்காருவதையும் கெளரவக் குறைவானதாகக் கருதுவார்கள். இதைவிடத் தவறு என்னவென்ருல், அவர்களுடைய மூதாதையர்களே வெறுக்கவும் புராதன இந்தியாவின் உயர்ந்த குறிக்கோளத் தவருகக் கருதவும் தொடங்கி விடுவார்கள். i புறத்தே நிகழும் ஆடம்பரங்களேயெல்லாம், அவை вtb கவனத்தை இழுக்கக்கூடியவையாக இருப்பினும், விட்டுவிட்டு அடிப்படையான தத்துவத்தில் நம்முடைய கவனத்தைச் செலுத்து வதாக வைத்துக்கொண்டால், அடுத்தபடியாக எழுகின்ற கேள்வி, இதனக் கொண்டுசெலுத்த கம்மிடத்திலுள்ள ஆதாரங்கள் போது மானவையா என்பதாகும். ஒரு பள்ளிக்கட்டத்தை நிர்மாணிக்கும்