பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அனைத்துலக மனிதனை நோக்கி குழந்தைப் பருவத்தில் பெறக்கூடிய பயனுள்ள பல அனுபவங்களை அப் பிள்ளே பெற முடியாமல் போகிறது. அதன் பயனுக, உணர்ச்சி உலகத்தில் மிகக் குறைந்த அனுபவத்தோடு அவன் வளர்ச்சி அடைகிருன். முதலாவதாக, அந்தப் பிள்ளைக்குக் கையுங் காலும் வளமாக இருந்தபோதிலும், ஒரு கொண்டியாகவே வளர்ந்துவிடு கிருன். ஏனென்ருல், கூண்டில் அடைத்த அல்லது ஆணியால் அறையப்பட்ட பறவைகளைப்போல அவன் பெற்ருேர்களே வாழ்ந்து வருகிருர்கள். ஆதலால், பிள்ளையும் அங்ங்னமே வளர்க்கப்படுகிறது. அவன் நடக்கக்கட்டாது ; ஆகவே, அவனுக்கு ஒரு வண்டி வாங்கித் தருகிருர்கள். கனம் குறைந்த சமானேக்கட்ட அவன் தூக்கக் கூடாது என்பதற்காக, அவனோடு வேலையாள் ஒருவன் அனுப்பப் படுகிருன். எதையுமே அவன் செய்யக்கூடாது என்பதற்காக, எப்பொழுதும் அவன்கூட ஓர் ஏவலாள் இருந்துவருகிருன். நல்ல கட்டுமஸ்தான உடம்பைப் பெற்றிருந்தும், பக்கவாத முடையவனப் போல அவன் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இவையெல் லாம் அவன் செய்யவேண்டி யிருப்பதன் காரணம் அவனுடைய உடம்பில் ஏதோ குறைபாடு இருக்கிறது என்பதல்ை அன்று; ஆல்ை, மற்றவர்கள் அவனுடைய செல்வ கிலேயைப்பற்றிக் குறை வாக எண்ணி விடுவார்கள் என்பதனுலேயே, இவ்வாறு நடைபெறு கின்றன. இதன் பயனுக, மிக எளிய காரியமும் அவனுக்கு மிகக் கடுமையான செயலாகவே காட்சி யளிக்கின்றது. சாதாரணமாகப் பிறர் செய்யும் காரியங்களை அவன் செய்ய வெட்கப்படுகிருன். அவன் வளர்கின்ற பணக்கார சமுதாயத்திற்கேற்ப, அவனுடைய பெற்றேர்கள் பயனில்லாத சில பழக்க வழக்கங்களே அவனுக்கு ஏற்றி, சாதாரண மனிதன் அனுபவிக்க வேண்டிய அடிப்படையான சில உரிமைகளைக்கூட அவனுக்கு மறுத்துவிடுகிருர்கள். தானியம் விளேகின்ற வயலில் களையை முளேக்க விடுகின்ற இத்தகைய பெற் ருேர்களேக் குழந்தைகளின் பாதுகாவலர்கள் என்று சொல்லி, அவர்கள் பொறுப்பில் குழங்தைகளே வளருமாறு விடுவது பொருத்தம் என்று சொல்ல முடியுமா? ஆடம்பர வாழ்க்கையால் ஏற்படுகின்ற படாடோபத்தை வயது வந்தவர்கள் அனுபவிப்பதைத் தடுக்கமுடியாது. ஆனல், இத்தகைய படாடோபத்தை விரும்பாத குழந்தைகளை, இதனை விரும்பி ஏற்றுக் கொள்ளுமாறு பிடிவாதம் செய்வது பொருத்த மற்றதாகும். புழுதியும், மண்ணும் கூடிய தரையில் விளையாடுவதுடன், வெயிலே யும், காற்றையும், மழையையும் குழந்தைகள் பெரிதும் விரும்பு