பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 16. எடுத்துப் போட்டுக்கொண்டு வழி நடந்தாள், அவள் பல்லெல்லாம் தெரியக் காட்டிச் சிரித்தபடி, "ஆகட்டும்" என்று சொன்னுன் வீரமணி. - அன்னக்கிளியின் அழகு மறைந்தவுடன், ஏனுே அவனுடைய சிரிப்பு மறையத் தொடங்கிவிட்டது. மன ஆழி § 2-யர்நிலைப் பள்ளியில் கடைசி மணி அடித்துவிட்டார் கள், - - அந்தி வானத்தில் விந்தைக் கோலங்கள் மலர்ந்திருந்தன. கன்னியாகுரிச்சி மஞ்சள் பூசப்பட்டிருந்த அன்னக்கிளியின் அழகு முகம் செத்துப்போய்விட்டது. வாசல் வெளியைப் பார்த் துப் பார்த்துக் கண்கள் பூத்துவிட்டன. பூத்திருந்த மல்லிகைப் பூக்கள் அவரே வருந்தி வருந்தி அழைத்தன. அவள் அவ்வழைப். பைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அவள் நெஞ்சம் குலுங்கியது. உள்மன வட்டத்தில் நீறுபூத்த நெருப்பாகக் கனன்ற கவலையின் துயரம் அவளை வாட்டியது; வாடிவிட்டாள் அவள் எதை எதையோ நினைத்தாள்; எதை எதையோ மறந் தாள், ஏதேதோ கவலைகள் அரித்தன. ஏதேதோ, துயரங்கள் மூட்டமிட்டன. தெய்வத்தின் சந்நிதிக்குப் போய்விட்டு, அதே உணர்வின் பக்தி நிறைவோடு வீரமணியின் வீட்டுக்குச் சென் ருள். இப்படி ஒருதரமல்ல, இரண்டுதரம் சென்ருள். இருமுறை யும் அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தில் விசா, ரித்தாள். புலன் ஏதும் கிட்டவில்லை; பலன் ஏதும் கிட்டவில்லை. அன்னம் சிந்தனை வசப்படலாளுள்: "மச்சான்காரவுக இப்பிடிச் செய்வாகன்னு நான் நினைக் கவேயில்லையே?... ஏன் இப்புடி என்னை ஏச்சுப்புட்டாங்க?... தனக்காகக் காத்துக்கிட்டு சாப்பிடாம பட்டினியோட ஒருத்தி - இங்கணே. காத்துக்கிட்டு இருப்பாளேன்னு அக்கறையும் அன் பும் கவலேயும் கொண்டிருந்தாக்க இப்பிடிச் செய்வாங்களா?