உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲፫? எம் பட்டினியைப் பத்தி எனக்குக் கவலையில்லை. ஆளு. அவுசு பசி பொறுக்காதவுகளாச்சே... ஊர் மண்ணை எந்த நேரத்திலே மிதிச்சாங்களோ, வந்து ஒண்னு ரெண்டு நாளைக்குள்ளவே இப் பிடிப்பட்ட புசல் வீசத் தொடங்கியிருச்சே. ஆத்தா, நீ ஏன் இப்பிடிச் சோதிக்கிறே?... எங்க மச்சாணை ஏதுக்கு இப்பிடிக் சோதிக்கச் செஞ்சே?... ஆபத்து சம்பத்து யாருக்கும் பொது வின்னு சொல்வாங்க. ஆளு, அப்பிடிப்பட்ட ஒரு ஆபத்துக்கு எங்க குளமங்கலத்து அயித்தை மகன் மாணிக்கத்தோட தலைக் காயத்திலேயிருந்து ஆடு அறுத்துக் கொட்டுத்தன்ன ரத்தம் கொட்டினதை நான் துடைச்சது பெரிய குத்தமின்னு நாக்கிலே நரம்பில்லாம, நெஞ்சிலே ஈரமில்லாமப் பேசிப்புட்டாங் களே?... யாரோ சன்டாளி சூர்ப்பநகை என் மச்சான் மன. சைக் குத்திக் கலைச்சிருக்காங்க! அந்தக் கூனியைத் தெய்வம் தான் கேட்க வேணும்! ... - அன்பு எதையும் கேக்கமாட்டாது, குடுக்கத்தான் செய்யு" மீன்னு காந்தி மகாத்துமா சொன்னதை அடிக்கொருவாட்டி: குளமங்கலத்து அயித்தை மவன் சொல்லிக் காட்டுவாங்க ஆளு. இந்த பூவாத்தகுடி அயித்தை மவனே அதுக்கு நேர் விரோத மாய் நடக்குருங்களே. நான் அன்போட அந்தரங்க சுத்தியாய் அந்தக் குளமங்கல அயித்தை மவைேட மண்டை ரத்தத்தைத் துடைச்சதிலே என்ன குத்தம் இருக்குது?... என்ளுேட பரிசுத்த ன்ன அன்பைக் கண்டு மனச் சந்தோஷப்படுறதுக்குப் பதிலா, வின் பொருமையும் அல்ப சந்தேகமும் படுருங்களே, இந்த மச்சான்?. ஒரு கிழமைக்கு எத்தனையோ தரம் இங்கிட்டுத் தான் அந்த அயித்தை மகன் சாப்பிடுருங்க, துரங்குருங்க எழுந் இருக்கிருங்க. இதைக்கூட யாரானும் மச்சான்கிட்டே ஒதி, இதைப் பத்திக்கூட சம்சயப்பட்டாலும் ஆச்சரியப்படுறதுக் இல்லைதான். அந்தக் குளமங்கலத்து அயித்தை மகன் மாணிக்கம் கீறின கோட்டைத் தாண்டாதவுக, கிழிச்ச வெத்திலையைப் போடாதவுக என்கிற சங்கதி ஊருக்கெல்லாம் தெரிஞ்ச ரகசி யம்தானே? ஆளு. இந்தச் சொந்த மச்சானுக்குத்தான் அதெல்