பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆளுங்களை இனம் கண்டுக்கிட்டுப் பழகுங்கன்னு. மாமனுக்கும் மாப்புள்ளைக்கும் சண்டை மூட்டி விட்டுப்புட்டு வேடிக்கை பார்க்கிற நாசமாப்போற ஊரு இதுன்னு எச்சரிக்கை குடுத் தேன். எதையும் நீங்க கேட்டுக்கிடலை. இப்ப விசயம் முத்திப் போச்சு. நீங்களே வேணும்னு முத்த விட்டுப்புட்டீங்க. இனிமே வெள்ளம் தலைக்கு மேலே சாண் போளு என்ன, முழம் போளு என்ன?... இப்ப நீங்க என்ன சொல்லுநீங்க?... புதுசா வீடு வாங்கிக்கிடுங்க, ஒங்க ஆசைப்படியே உங்க முதல் தீபாராத னையை ஆத்தாகிட்டே சொல்லி ஏத்துக்கிடச் சொல்லுங்க. 3 で அது எனக்கும் பெருமைதானே... ஆணு ஒன்னு; இந்தக் கிழி வன் உசிர் உடம்பிலே ஒட்டியிருக்கிற அரிதிக்கு உங்களை அச லான் எவனும் மாப்பிள்ளையாக்கிக்கிட ஏலவே ஏலாது. அதுக்கு விடவும் மாட்டேன். ஆமாங்கிறேன். ஆமா ... ஒங்களுக்கு புது ரத்தம்... அதாலேதான் வாய்கொண்ட மட்டுக்கும் மட்டி லாமப் பேசிப்புட்டீங்க. நீங்க எம் மாப்புள்ளை. அது கெடக் கட்டும். நீங்க என்ளுேட தமக்கையார் மகன். நான் தோளிலே போட்டு வளர்த்த கண்ணு நீங்க... உங்களுக்கு என்னத் திட்டு றதுக்கு உரிமை இருக்கு. ஆன. ஒரு மூளும் மனுசன்கிட்டே சொந்த அம்மான ஏசுருேமேங்கிற நல்ல புத்தி ஒங்களுக்கு இருந்திருக்க வேணும். பரவாயில்லை, என் பொண்ணுன பொண்ணு அன்னத்தோட நல்வாழ்வை நெனச்சு அல்லாத்தை யும் சுத்தற மறந்துப்பிட்டேன். இம்புட்டு நேரமாய் கொதிச்சுக் கிட்டிருந்த கோபம் சாடாவையும் ஆத்திக்கிட்டேன். கோபம் அடங்கி, வெறி தனிச்சப்பாலேதான் இப்ப இங்கிட்டு வந்தேன். வாங்க நம்ம ஆட்டுக்கு. நாத்து நடவுக்குச் சாமி கும்பிடு ருேம். வந்து அதிலே கலந்துக்கிடுங்க... மாப்புள்ளேன்ன கோப தாபம் வரத்தான் வேணும். வாங்கங்கறேன் மாப்புள்ளே! ...” அன்பின் செறிவுடன், பாசத்தின் பரிவுடன், கடமையின் கண்ணியத்துடன் தர்ம நியாயத்தின் கட்டுப்ப்ாட்டுடன் வேண்டி ஞர் ஆதியப்ப அம்பலகாரர்.