உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲፰፥ விரமணி எழுந்தான். எச்சிலைக் காறித் துப்பிவிட்டு சிக ரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தான். - - இந்த அவமரியாதையை ஆதியப்ப அம்பலகாரரால் ஏத் றுக்கொள்ள இயலவில்லை பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டார். ரத்தப் பசையற்று இருந்த கண்களில் ரத்தம் கட்! டிக் கொண்டது. - 'மாப்புள்ளேங்கிற சொந்தம் இன்னிக்குத்தான் தோணு தாங்காட்டி?... அன்னைக்கு எனக்கு வண்டி இல்லேன்னு சொல் லுதப்ப தோணலேயே! செல்லாக் காசுக்கு வழியத்த அந்த மாணிக்கம் பயல்தானே அன்னிக்கெடுவுக்கு ஒங்களுக்கு ஒசந் திருந்தான். அந்தத் தரிசுக்கே ஓங்க பொண்ணுன பொண்ணக் கட்டிக் குடுத்துப்போடுங்க. போங்க வீணு எங்கிட்டே வாங்' கிக் கட்டிக்கிடாதீங்க! ... ஆமா, அப்பறமும் என் வீட்டு வாச குே - ... . வீறுகொண்டு, ஆணவச் செருக்குக் கொண்டு கத்தினுன் வீரமணி. தாராடி சாமிபோல கண்கள் ரத்த வெறி கொண்டிருந் தன். - - - - - - 'டேய் என்னு சொன்னேடா?...” என்று உக்கிரம் பூண்டு கர்ச்சித்தவண்ணம், வீரமணிக்கு எதிரில் போய் நின்ருர், ஆதியப்ப அம்பலகாரர். பற்களைக் கடித்தவாறு கோபத்தைக் கட்டுப்படுத்த எத்தனம் செய்து கொண்டிருந்தார்; கூடவில்லை. தோள் துவாலே நழுவியது. " . . . 。。。・・・ அதற்குள் வீரமணி, சிகரெட்டை வீசிவிட்டு, ஆவரஞ் செடிக்கு அருகில் கிடந்த கழியைக் கையில் எடுத்துக் கொண் டான். "இன்னம் புரியலையா? இப்ப புரிஞ்சுப்பிடும்" என்று உறுமிக்கொண்டே கைக் கழியைச் சுழற்ற முயற்சி செய்த அந் நேரத்தில், தன்னுடைய கைக்கழி அப்பால் வீசியெறியப்பட்டு விட்ட சங்கதியைப் புரிந்துகொண்டு, காட்டுப் புலியாகச் சிறிக் கொண்டு தலயை உயர்த்தின்ை, அவன், -