உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஏற்றுக்கிடாது. இளவட்டத்துக்கு உண்டான இந்தத் துணிகளை எதுக்கு அவுசு இத்தோடே வச்சு அனுப்பிக் குடுத்திருக் காக? ஒரு சங்கதியும் விளங்கலையே?’ என்ற சந்தேகம் அவளை அரித்தது. அப்போது, "ஆமா, மெய்தான். எல்லாத்தைப் பத்தி. யும் முக்கால்வாசி இந்தக் கடுதாசியிலே கண்டிருப்பாகளே! என்ற உணர்வு, தோன்றியது. பொழுது கூட சாஞ்சிருச்சு, அப் பாரு வார நேரம் அண்டுது. அதற்குள்ளாற் அந்தத் தபாலக் கிழிக்க்ப் படிச்சா என்ன?. அப்பன்காரவுகளுக்குத்தானே போட்டிருக்குது? ஆமா ஆமா அதிலே அவுசு இந்த அன் னத்தைப் பத்தி அங்கிட்டு இங்கிட்டு எதாச்சும் எழுதி வச்சிருக் காம இருக்கமாட்டாகளே!. என்ற மறு நினைவும் எழுந் தது. - நடைக் கதவின் சன் ன லும் அடைப்பட்டிருப்பதை உணர்ந்து, அதே உணர்வில் இருந்து வெளியேறிய ஒரு கனவுக் இறக்கத்தின் கள்ளத்தோடு தரையில் குந்திக் கொண்டு, மேற் படி கடிதத்தைத் தலைப்புப் பார்த்துப் பிரிக்க எண்ணி, கடிதத் தின் பின்பகுதி ஒட்டப்பட்டிருந்த கரைக்கட்டில் துளி எச்சில: