6] கஞ்சிக் கலயம் ஒன்று குறுக்கு மறித்து நடந்தது. தெற்குச் சீமைக் கேதாரி "கிடை" போட்டிருந்த வேலி யில் அகப்பட்டுக்கொண்ட செம்மறிக் குட்டி ஒன்று அலறிக் கொண்டிருந்தது. அவள் காதுகளிலே தேய்ந்து விழுந்து கொண்டேயிருந்தது! - - - - - - - பலாப் பழத்தைத் துரக்க முடியாமல் துரக்கிக் கொண்டு வந்து திண்ணைத் தாழ்வாரத்தில் வைத்ததற்குப் பிந்திதான் ஆதியப்ப அம்பலத்திற்கு சுமை கழிந்த நிலை ஏற்படலாயிற்று. இத்தனை வயசில் கணக்கன் ஒன்றரை மைல் தொலைவிற்கு காடு கரம்பை, திட்டுத் திடல் எல்லாவற்றையும் கடந்தது. உச்சிப் பொழுதில் அலஞ்சிரான் காட்டு மயானத்தைத் தாண்டி, தலைக் சுமையுடன் வருவதென்ருல், லேசுப்பட்ட காரியமல்லதான். தலச் சிம்மாட்டுத்துணியை எடுத்துமேனியையும் முகத்தையும் துடைத்துக் கொண்டு, மகளைக் கூப்பிட்டார். பதில் வராமல் போகவே, பேசாமல் வந்து திண்ணையில் தஞ்சமடைந்தார்; கதவு சாத்திப் பூட்டியிருந்ததையும் கண்டு கொண்டார். ஆனி மாதத்தின் முதல் செவ்வாய்ச் சந்தையில்தான் தன் தமக்கை மகன் வீரமணி ஊர் வரப்போவதாக முதல் சேதியை அவர் கேள்விப்பட்டார். அந்த மகிழ்ச்சியின் நினைவில் அந்திக்கு வண்டியோட்டிக் கொண்டு வீடு திரும்பின்வுட்ன், இளவட்டம் போல நுகத்தடி வழியாகத் தாவித் தரையில் குதித்த சம்ப வத்தை இப்போது தினத்துப் பார்த்தார். அப்போதைய நிலை மைக்கு இப்போதைய நிலைமைக்கும் உள்ள வித்தியாசத்தை அவர் மனம் ஆராய்ந்தபோது, மலக்கும் மடுவுக்கும் உள்ள பேதம் புலனுகாமல் இல்லை. - ベー。.." 、 。"; - ... அம்பலகாரர் நெஞ்சத்து ஆழியில் எண்ண அலைகள் ஆர்ப் நான் கண்டவாகிலே லாம் இலக்கு இப்பிடிப்பட்
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/46
Appearance