பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§5 பெற்றவரை எழுப்ப வந்தாள். அன்னம். வாசற்புறத்தில் பன்றிகள் திரிந்தன. விரட்டிவிட்டு வந்தாள். மடத்துக் குளத் துக் கரையில் போடப்பட்டிருந்த காளவாயிலிருந்து புகை வந்து சூழ்ந்து விலகிக் கொண்டிருந்தது. நெஞ்சின் புகை கனத் தது. ஊராளும் தாயை வேண்டிக்கொண்டு தின்ருள். வாசலில் சைக்கிள் ஒன்று வந்து நின்றது. காக்கி உடுப்புக் காரன் ஒருவன் "சித. ஆதியப்ப அம்பலம் விடு இதுதான?’ என்று அவளிடம் விசாரிக்க அவள் "ஆம்" என்ருள். - 'தந்தி வந்திருக்கு!” என்ருன் வந்தவன். "தந்தி என்று சொல்லக் கேட்டதும், அன்னத்துக்குக் கதி கலங்கியது. உடனே தந்தையை உசுப்பிள்ை. அம்பலம் கண்களை துடைத்துக்கொண்டு அமரிக்கையுடன் தந்தியைக் கையொப்பமிட்டு வாங்கினர். அவசர தந்தி அறிந் தாங்கியில் இருந்து வந்திருந்தது. எனவே, அதற்குண்டான கூலியைச் சேவகனுக்குக் கொடுத்துவிட்டு, துளி திருநீறு எடுத் துப் பூசிக்கொண்டு சுருக்குப்பையை இடுப்பில் செருகிக்கொன் டார். தந்தி உறையைக் கிழித்துக்கொண்டே ஏதோ ஒரு நல்ல சேதியை எதிர்பார்த்தவராக வளவை நாடி விரைந்தார். இருப்புக் கொள்ளாமல் தவித்த அன்னத்திடம் வந்து "உன் அயித்தை மவன் நான்க்கு மைத்தநாள் விசாழக்கிழமை காலம்பற வண்டிக்கு வருதாம். ஆயிங்குடி டேசனுக்கு என்ன வரச்சொல்லி தந்தியிலே பேசியிருக்குது!" என்று புளகத் துடன் அறிவித்தார். அம்பலக்காரக் கிழவர் நாணத்தை மீறிய ஆர்வத்துடன் "நீங்க வெள்ளனவே கஞ்சி குடிச்சிட்டுப் போயிடுங்க. வண்டிக்குக் கூடு மாட்டிக் கிட்டு போகுத்தான் தேவல்" என்ருள் அன்னம். "பின்னே என்ன மாப்புள்ளையைக் கால்நடையாவன அழைச்சுக்கிட்டு வருவேன்?. திண்ணையிலே இருக்கு பாரு அ-3