婷 அல்லாம் அப்பன்காரர் செஞ்ச தற்புத்திதான்: ' அன்னக்கிளி முற்றத்துக்கு வந்தாள். அத்தை மகன் வந்து விட்ட சேதி கிடைத்தபின் சமையலுக்குத் தோதுபண்ணன்ாம் என்பது அம்பலத்தின் ஏற்பாடு. அவர்களுக்கு மத்தியானச் சாப் பாடு ஒரு பொருட்டல்ல. சுடு சோருக இரவு சாப்பிடுவதில் பழ கிய மக்கள் அவர்கள். ‘புலந்திரன் களவு மாலை யைத் தொட்டுப் பார்க்க விழைந் தான், அன்னம். அதற்கு முட்டுக்கட்டையாக வந்தார்கள். அவ: ளுடைய பாங்கிமார்களான அகிலாண்டமும் அஞ்சலையும். "இருந்திருந்து வேலைமெனக்கெட்டு புலந்திரனைத்தாளு படிக்க வேண்டும்?... சிலட்டுரிலே திருவிளையாடல்னு ஒரு பயாஸ்கோப் ஆடுதாம். புதுசாம். அதோட பாட்டுப் புத்தகம் வச்சிருக்கேன். அதைப் படிச்சாலும் புண்ணியம் கெடைக்கு மாமே!" - - "அவ கெடக்கிருடி, அன்னம். அயிலாண்டத்துக்கு சினிமாப் பாட்டுன்கு ஒரு மசக்கம்தான். சமைஞ்ச் பொண்ணுக ஊர் பிள்ளையார் கோயில் எல்லேயைத் தாண்டப்பிடாதின்னு ஒரு கட்டுத் திட்டம் வச்சிருக்காட்டி, ஒரு நாளைக்கு ஒரு ஆட்டம் மல்லுக்கட்டிப் பார்க்காம தப்பமாட்டா!... சமையறதுக்கு முன்னுடி அது - கூத்திலே ஒண்ணேயானும் விடவேணுமே?. அரிசி மில்லு சின்னயா அண்ணன் வேலன், வேடன், விருத்தன் வேசம் போட்டு நடிக்கிறதையும், காயாத கானகத்தே பாட் டுப் படிக்கிறதையும் அலுக்காமல் சலிக்காமல் ரசிச்சதாச்சே?. இப்ப அதெல்லாம்வேளும். நாம ஒரு கடுத்தம் தாயம் ஆடு வோமே!" என்ருள் அஞ்சல. ஒன்றரைக்கண் பார்வைக்காரி. நெருப்பைக் குளிப்பாட்டிய நிறம். ஆலுைம் கவர்ச்சி மிகுந்த உடல் வாளிப்புக் கொண்டவள். * ~ *------ "என்டி நீ என்ன சொல்லுறே கங்காணி பேத்தி: "உன் இசுட்டப்படி செய்யேன்”
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/55
Appearance