பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 செக்கச் சிவந்த இதழ்க் கடையில் ஊர்ந்தது. நாணப் புன் னகை மதுக்குடம் ஏந்திய மனமலர் சிரிக்கக் கேட்பானேன்? "வாங்க, மாப்பிள்ளை!” என்ருர், ുഖ. - வீரமணி நடை பயின்ருன்: கால்நடையன்கள் சரசரத்தன. அன்னக்கிளி வானம்பாடியாக உள்ளே பறந்தாள். மெட்டி ஒலிக்க மிஞ்சிகள் ஒலித்தன. மேனியில் கிளர்ந்த புளகக் கிளர்ச்சியுடன் நடையைத் தாண்டி அடுப்படியை அடைந்தாள். நெஞ்சிடைச் சுழித்த ஆனந்தத்தின் ஆரவாரத்தில் ஒருகணம் அவள் திக்குமுக்க்காடிப் போள்ை. . . . " "குந்துங்க... வசமாக் குந்துங்க பாயிலே!" ரங்கூன் பாயில் வீரமணி அமர்ந்தான். டெர்லின் சட் டையை ஒழுங்குபடுத்தின்ை. தங்கக் கைப்பொத்தான்களைப் பொருத்திக் கொண்டான். ஜரிகை வேட்டியைப் பாதங்கள்வர்ை இழுத்துவிட்டான். ஐந்து விரல்கடை ஜரிகைப் பட்டை பள. பளப்புக் காட்டியது. தன்னைத்தானே ஒருமுற்ைகுனிந்து பார்த் துக் கொண்டான். மைனர் சங்கிலியின் அடிக்கட்டில் -- NITHIಿ நரிப்பல் தங்க டாலர் மின்னியது. கைவிரல் மோதிரங்கள் முத் தெழில் சிந்தின. உள்வட்டமாகச் சுற்றிக் கொண்டிருந்தார். அம்ப்ல்ம். அளிக்கேன் விளக்கை விட்டத்தில் தொங்கிய கொக்கியில்