பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பலகாரர்கள் என்னும் அந்த மறக்குலத்தவர். இடையே ஒரு மரபு-வழக்கம் இருந்து வந்தது. புஷ்பவதியான பெண்ணுக்கு அவளைக் கொஞ்சம் உரிமை பெறும் மாப்பிள்ள்ை சடங்கு சுற்றும் நாளன்றைக்கு விலையுயர்ந்த பட்டுச் சேலையும் பட்டு ரவிக்கையும் எடுத்து உலுப்பை வைக்க வேண்டும். அம்மாதிரி உலுப்பை வைத்து கொட்டு முழக்கத்தோடு ஊரறிய ஊர்வலம் போய் இரு சம்பந்தி வீடுகளிலும் தாம்பூலம் மாற். றிக்கொண்டுவிட்டால், அப்பால் அந்தக் கன்னிக்கு உடையவன். அந்த மாப்பிள்ளை என்பது உறுதியாகிவிடும்!-இதுதான் அக் குலத்தவர் இடையே வமிச வழியாக நிலவிவந்த-நிலவி வரும் ஒரு பண்பாடாகவும் இலங்கி வந்தது-இலங்கி வருகிறது!) அன்னக்கிளி சமைந்ததும். அவளுக்குரிய சடங்குக்கு உலுப் பைச் சேலை ரவிக்கை எடுத்து வைக்கும் உரிமையின வீரமணி. தேடிவந்தான் வீரமணி. அவளோ நாணத்தின் கன்னி பார்த்தாள். ஒடஎத்தனம் செய்தவளை அவன் ஓடிப்ே