பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னக்கிளி

97

-லிருந்த மாலையைக் கண்ணாடி அருகே வைத்துவிட்டு அவள் அவசரம் அவசரமாகக் கீழே சென்றாள்.

அன்னக்கிளி அறையின் பக்கம் திரும்பிப் பார்த்தாள். முத்துமாலை அவள் கவனத்தைக் கவர்ந்தது. ஒரு நெடு மூச்செறிந்து அதைக் கவனித்துவிட்டு அவளும் தலைவியைப் பின்தொடர்ந்தாள்.

சிறிய மூட்டையை உரிய இடத்தில் வைத்துவிட்டுத் திரும்பிய, முக்காடிட்ட உருவத்தை அமுதவல்லி எதிர் கொண்டு நிறுத்திப், போர்வையைப் பற்றி இழுத்தாள். கிழவி பொன்னம்மாதான் அது.

தலைவியைக் கண்டு நடுநடுங்கிப் போனாள் கிழவி. தான் இவ்வாறு தலைவியினால் கண்டுபிடிக்கப்படலாம் என்று அக்கிழவி எண்ணியவளே அல்ல. அமுதவல்லியின் திடீர்த் தோற்றமும் செய்கையும் அவளுக்கு அதிர்ச்சி தந்தன.

'இதென்ன நாடகம்?' என்று கடுகடுப்பாக வினவி னாள் அமுதவல்லி.

அன்னக்கிளியும் இன்னும் பலரும் இதற்குள் அங்கு வந்து சூழ்ந்துவிட்டனர்.

'இங்கிருந்து என்ன எடுத்துச் சென்றாய்? ஏன் மறைந்து ஒளிந்து பதுக்கி வைத்தாய்? அங்கு வந்து அதை எடுத்துச் செல்வது யார்?' என்று கேள்விக் கணைகளை வீசினாள் தலைவி.

நான் பெரிய குற்றம் எதுவும் செய்யவில்லை அம்மா என்று அழுது புலம்பினாள் கிழவி.