பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

அன்னக்கிளி

'என்ன அம்மா,என்ன வேண்டும்?' என்று கேட்பதற்காக அவள் வாய் திறந்தாள்.

அதற்குள் சுடுகின்ற சரமாகத் தெறித்தது அமுதத்தின் பேச்சு. 'ஏய் அன்னம்,எங்கே அந்த முத்தாரம்?' என்று சீறினாள் பெரியவள். அன்னக்கிளிதான் அதை ஆசையோடு எடுத்து மறைத்து வைத்திருக்கிறாள் என்று தலைவி கருதி, அவளைக் குற்றம் சாட்டுகிற தோரணையில் ஒலித்தது அது.

அன்னக்கிளி உண்மையாகவே பதறிவிட்டாள், முகம் கலவரத்தைக்காட்ட அவள் 'எனக்குத் தெரியாதே அம்மா!' என்றாள்.

'கள்ளி! என்னிடமே உன் வேலைகளைக் காட்டத்துணிந்துவிட்டாய். அப்படித்தானே?' என்று கேட்டபடி அமுதம் அன்னத்தைப் பார்த்த பார்வையில் குளுமை இல்லை. ஆற்றல் இருக்குமானால் எதிரே நிற்பவளை எரித்து நிறு ஆக்கிவிடக்கூடிய அளவு குமைந்த உள்ளத்தின் கொதிப்பு அவள் விழிகளில் சுவாலையிட்டது.

'நீதானடி இந்த அறைக்குள் கடைசியாக வந்தாய்? தோப்பில் நிகழும் அதிசயத்தை என்னிடம் கூறுவதற்கு வந்த என் கையிலிருந்த முத்து மாலையை ஆசையோடு கவனிக்கவில்லை? அதைப்பற்றி என்னவோ கேட்டாயேடீ? நான் அதைக் கண்ணாடியின் முன் வைத்துவிட்டு வெளியேறியதும் நீதானே இங்கிருந்தாய்? சிறிது நேரம் சென்ற பின்தானே நீ கிழே வந்தாய்?...'

உருண்டு புரளும் இடிகளைப்போல் சொற்களை உருட்டி னாள் தலைவி. அச்சம் மீதுறப்பெற்று, செயல் திறம் இழந்து,