பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

அன்னக்கிளி


தானே ஆகவேண்டும்!' என்று உற்சாகமாக உரையாடிக் களித்தனர்.

அந்த அப்பாவியின் தலையை மொட்டையடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, அவனைக் கழுதைமேல் ஏற்றி ஊரைச் சுற்றி வரச்செய்து, பிறகு நகரத்துக்கு வெளியே துரத்தும்படி கட்டளையிட்டாள் அமுதவல்லி.

அவள் தாய் எவ்வளவோ கெஞ்சினாள். அவனும் அழுது கெஞ்சிக் கும்பிட்டான். அலங்காரியின் மனம் மாறுவதற்கு மறுத்துவிட்டது.

16. இன்பக் கிளியானான் அன்னக்கிளி

ன்னக்கிளி வெட்கம் மிகுதியால் அறையினுள் ஓடுங்கிக் கிடப்பாள் என்று மற்றவர்கள் எண்ணிக்கொண்டிருந்த வேளையில், அவள் கடலை நோக்கிச் செல்லும் தனி வழிகளைத் தேர்ந்து வேகமாகச் சென்றாள். எரிந்து புகையும் கெஞ்சும் அழுது அழுது சிவந்த கண்களும், சோகம் சூழ்ந்த முகமுமாய் அவள் சென்றுகொண்டிருந்தாள். அவளுக்கு எல்லோர் மீதும் வெறுப்பு ஏற்பட்டிருந்தது.தன் பேரில் அநியாயமாகக் குற்றம் சாட்டுகிற அமுதவல்லி மீது அவளுக்கு வெறுப்பும் ஆங்காரமும் எழுந்தன. எனினும், அபலையான அவளது கோபம் ஏலாத்தனத்தின் விளைவாகத்தானே இருக்க முடியும்! அமுதவல்லியை அவள் என்ன செய்ய இயலும்?

இத்தகைய மோசமான நிலையிலே அவள் வாழ நேர்ந்ததற்காக அவள் வாழ்வை வெறுத்தாள்; தன்னையே வெறுத்தாள். 'உயர் நிலையில் இருக்கிறோம் என்பதற்காக,